Shrutika Arjun: Tamil Cinema’s Bright Star Shines in Hindi Bigg Boss Season 18

In a historic first, Tamil actress Shrutika Arjun has shattered cultural barriers and entered the iconic Hindi Bigg Boss house, hosted by none other than Bollywood’s superstar Salman Khan. As the 18th season of the Hindi Bigg Boss premiered with glittering fanfare, Shrutika became the first-ever Tamil celebrity to be a part of this national spectacle, sending waves of pride across Tamil Nadu.

While Tamil Nadu celebrated the grand launch of Bigg Boss Season 8 on Star Vijay, hosted by the beloved Vijay Sethupathi, another momentous occasion unfolded on Hindi television. With her poised elegance and charming personality, Shrutika Arjun walked into the Bigg Boss house, marking a significant moment in the show’s history since its inception in 2006.

Shrutika’s entry into the house isn’t just another reality TV stint; it’s a bold statement of breaking boundaries. A proud granddaughter of Tamil cinema legend Thengai Srinivasan, she carries a rich legacy of Tamil artistry. Her illustrious acting journey began as the leading lady in Sree, alongside the now-superstar Suriya. She quickly won hearts with memorable performances in films like Thithikkudhey and Nala Damayanthi, even expanding her acting repertoire into Malayalam cinema.

After a brief hiatus from the film industry, Shrutika made a resounding comeback on Cooku with Comali Season 3, winning over viewers with her lively and endearing persona. Her sharp wit, coupled with a playful nature, instantly made her a fan favorite. She soon became a familiar face on Star Vijay shows, and now, with her entry into Hindi Bigg Boss, Shrutika has elevated her career to new heights.

Social media platforms are abuzz, brimming with love and support from fans across Tamil Nadu and beyond. The hashtag #ShrutikaInBiggBoss has been trending, with Tamil audiences rallying behind her in this 100-day marathon of emotional drama and strategic gameplay. Many believe she has the charm, resilience, and presence to shine bright in this competitive space.

The Bigg Boss house, infamous for its high-voltage drama, now has a unique flair with Shrutika’s presence. In the very first episode, she captivated her fellow housemates by sharing her enchanting love story, a moment that has already won over fans. Her entry into this uncharted territory is more than just participation; it’s an inspiration, symbolizing how talent from regional cinema can flourish on the national stage.

As Hindi Bigg Boss unfolds each night at 10 PM on Colors TV, Shrutika’s journey promises to be one filled with memorable moments. With her vivacious spirit and undeniable screen presence, she is all set to take the nation by storm. The audience can also catch every moment of her adventure 24/7 on the Jio Cinema platform.

Let’s join hands in rooting for Shrutika as she embarks on this thrilling journey, hoping that she not only captivates the Bigg Boss house but also emerges as the winner, bringing the title home to Tamil Nadu.


முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை.

நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது,அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது,அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான”ஸ்ருதிகா அர்ஜுன்” பங்கேற்றுள்ளார்.2006 ஆம்‌ ஆண்டு தொடங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர்‌ பங்கேற்றது இல்லை ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

நம்மில் ஒருவர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றது நமக்கு பெருமையே,இப்பெருமையை நமக்கு பெற்று தந்த “ஸ்ருதிகா”,தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான “தேங்காய் சீனிவாசன்” அவர்களின் பேத்தி ஆவார்.சினிமா குடும்ப பின்னணியில் பிறந்த இவர் நம் சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, தித்திக்குதே,நளதமயந்தி திரைப்படங்களிலும்,மலையாள திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.சில ஆண்டு கால இடைவெளிக்குப்பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கிய குக் வித் கோமாளி சீசன் 3, நிகழ்ச்சியில் பங்கேற்று,தனது குறும்புக்கார குணத்தினால் மக்கள் மனதை வென்றார்.அதைத்தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் இன்று ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில்,போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.தமிழகத்தில் இருந்து அவர் வெற்றிபெற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்த‌ ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி தினமும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது,ஜியோ சினிமா வலைத்தளம் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கிறது.

இன்று முதல் நாள் எபிசோடில் ஸ்ருதிகா தனது காதல் கதையை சக போட்டியாளர்களிடம் கூறும் ப்ரோமா மக்களின்‌ அன்பைப் பெற்று வருகிறது.ஸ்ருதிகா, தொடர்ந்து விளையாடி 100 நாட்களை வெற்றிகரமாக முடித்து டைட்டில் வின்னராக வாழ்த்துவோம்.

Share this:

Exit mobile version