என்னது? அவரா? அந்த மாதிரியா? பிரபல பெண் அரசியல்வாதி மீது பகீர் பாலியல் புகார்

தேர்தலுக்கு முன் பரபரப்பான தகவல்களும், புகார்களும் வெளியாவது சகஜம். ஆனால் ஆந்திராவில் நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் என்பவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரால் ஒட்டு மொத்த ஆந்திரமே அதிர்ச்சியில் உள்ளது.

நம்ம ஊர் எம்ஜிஆர் மாதிரி, கடவுளுக்கு நிகராக அன்று ஆந்திர மக்களால் அதிசயித்து பார்க்கப்பட்டவர் என் டி ராமராவ். அவரது இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி மீது கோட்டி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் அளித்துள்ள புகாரில், “கடந்த நான்கு வருடங்களாக எனக்கு லட்சுமி பார்வதியை தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன். இதற்கிடையே கடந்த ஒன்றரை வருடமாக லட்சுமி பார்வதி என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் மெசேஜ் அனுப்பி வருகிறார்.

மேலும் ஆபாச படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார். அவரின் ஆசைக்கு இணங்கினால் ஜெகன் மோகன் ரெட்டியிடம் சொல்லி கட்சியில் பெரிய பதவி பெற்றுத்தருவதாக கூறி தொல்லை கொடுக்கிறார். இல்லை என்றால் நிறைய விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல் விடுத்து வருகிறார். இவரால் எனது குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளது,” என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர், “அவரை என் அம்மா போல் நினைத்தேன். ஆனால் எனக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுப்பதுடன், ஆபாசமாக வீடியோ அனுப்பி வருகிறார். எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் தனக்கு லட்சுமி பார்வதி அனுப்பியது என்று சொல்லி செல்போன் ஸ்கிரீன்ஷாட்களையும், சில படங்களையும் ஆதாரங்களாக போலீசிடம் அளித்துள்ளார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், லட்சுமியின் தரப்போ இதை கடுமையாக மறுப்பதோடு மட்டுமில்லாம, இது அரசியல் எதிரிகளின் சூழ்ச்சி என்கிறது.

என்.டி.ராமராவ் மறைவுக்கு பின்னர் கட்சி சந்திரபாபு நாயுடுவசம் போன பின்னர், லட்சுமி பார்வதி என்.டி.ஆர். தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தினார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.