தெருக்களில் வாழ்ந்து கொண்டிருந்த சாந்தியின், தன்னம்பிக்கைக்கான ஊக்கமளிக்கும் பயணம்*

Chennai

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாந்திக்கு வாடகைக்கு வீட்டை வழங்கியது மட்டுமல்லாமல் , மகளின் கல்விக்கு உதவித்தொகையும் வழங்கியது.

38 வயதான சாந்தி சென்னையில் தெருவில் வசித்து வந்த தனது முன்னாள் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, அவள் பார்ப்பது எல்லாம் இழப்புதான். “என்னிடம் இரண்டாவது சேலை கூட இல்லை. எனவே, நான் அதே சேலையை துவைத்து அணிவேன். நாங்கள் தெரு மூலைகளில் தூங்கும்போது, எங்களை மூடிமறைக்க சணல் பைகள் இருந்தன. நான் உணவுக்காக கெஞ்சினேன், மற்றவர்களின் எஞ்சியவற்றை சாப்பிட்டேன், ”என்று அவர் விவரிக்கிறார்.

அப்போது சாந்தி எதிர்கொண்ட உலகம் இரக்கமற்றது, அக்கறையற்றது. “சில நேரங்களில், நான் பிச்சை எடுக்கும்போது, சில ஆண்கள் என்னை தவறான நோக்கத்தோடு அழைப்பார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததற்கு வருந்தினேன். “

இன்று, சாந்தி தனது வாடகை வீட்டில் பெருமையுடன் அமர்ந்து, ரயில்வேயில் ஒப்பந்தத் தொழிலாளியாக தனது வேலையைப் பற்றி பேசும்போது, தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை கண்டு வியக்கிறார்  “முன்பு எங்களுக்கு எதுவும் இல்லை. இன்று, எல்லோரையும் போலவே, நான் கூட வேலைக்குச் செல்கிறேன், மற்றவர்களுடன் பேசுகிறேன். எங்களுக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் இருக்கிறது, ”என்று அவர் கூறுகிறார்.

சாந்தியின் வாழ்க்கையில் இந்த வியத்தகு திருப்பம் எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பர்ட்ஸ் நெஸ்ட் (Bird’s Nest), நடைபாதை குடியிருப்பாளர்களின் மறுவாழ்வுக்கான திட்டமாகும். அவரது நிலைமை மிகவும் இருண்ட நிலையில் இருந்தபோது, எக்விடாஸின் பிரதிநிதி அவரை அணுகியதாக சாந்தி கூறுகிறார் . “அவர்கள் எங்களுக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்து அதற்கான வாடகையை செலுத்தினார்கள், அவர்கள் எல்லா வகையிலும் எங்களுக்கு உதவினார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இந்த உணர்ச்சிபூர்வமான வீடியோவில் அவரது முழு கதையையும் பாருங்கள்:

எக்விடாஸ் வங்கி சாந்திக்கு வாடகை  வீட்டை அமைத்தது மட்டுமல்லாமல் , மகளின் கல்விக்கான செலவையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். “அவர்கள் எனக்கு வேலைவாய்ப்பை அமைத்து தந்தார்கள், என் மகளின் கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாக்காளர் ஐடி, பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றைப் பெற அவர்கள் எனக்கு உதவினார்கள்” என்று சாந்தி விளக்குகிறார்.

2010 இல் தொடங்கப்பட்ட எக்விடாஸின் பர்ட்ஸ் நெஸ்ட் (Bird’s Nest) திட்டம், இதுவரை சென்னையில் 2074 நடைபாதை குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. 18 மாத காலப்பகுதியில், இத்திட்டம் பயனாளிகளுக்கு வீட்டுவசதி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்வாதார திறன் மேம்பாடு மற்றும் துணைக் கல்வி ஆகியவற்றை வழங்குகிறது, மேலும் தன்னிறைவுக்கான பாதையில் தங்களை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு ஒவ்வொரு வாய்ப்பும் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.  

 பர்ட்ஸ் நெஸ்ட் (Bird’s Nest) நெஸ்ட் திட்டம், மட்டுமின்றி  எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் மூலம் வங்கியின் ஒவ்வொரு ஆண்டும், எக்விடாஸ் அதன் நிகர லாபத்தில் 5% யின் சமூக வளர்ச்சி முயற்சிகளில் முதலீடு செய்கிறது. ஆகவே, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது சிறிய சேமிப்பிற்கான நம்பகமான இடத்தின் நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், சமுதாயம் மேம்படுத்துவதற்கும் அவர்கள் அளித்த பங்களிப்பில் மனம் கொள்ளலாம்.

சாந்தியைப் பொறுத்தவரை, அத்தகைய பங்களிப்புகள் செய்த வித்தியாசம் அவளுக்கு ஒரு சுலபமான வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மகளின் எதிர்காலத்தையும் மாற்றுவதாகும். “என் கனவுகள் மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் என் மகளைச் சுற்றி வருகின்றன, அவள் என் முழு உலகமும்” என்று அவர் கூறுகிறார்.

எக்விடாஸுடன் வங்கி கணக்கை துவக்குவதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

Share this:

Exit mobile version