சங்கத்தமிழன்’ அக்டோபர் வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம்  கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து வெளியான  அனைத்து  பாடல்களும்  நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் & டீசர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது ! அக்டோபரில் திரைக்கு வர இருக்கிறது .