சந்தியா கொலை, கிடைக்காத தலை: வெளிவராத திடுக் தகவல்கள்

ஒரு மர்ம நாவலுக்கே உரிய திகில் திருப்பங்களோட சந்தியா கொலை வழக்கு போயிட்டு இருக்கு. சம்பவம் நடந்ததா சொல்லப்படுற‌ வீட்டுக்கு அருகில் இருப்போர், இப்படி ஒரு கொலை இங்கே நடந்ததுக்கான எந்த அறிகுறியுமே இல்லைனு சொல்றாங்களாம்.

அதானால, ஒரு வேளை சந்தியவோட கொலையில வேற யாராவது சம்பந்தப்பட்டு இருக்கலாமோன்னும், அந்த சம்பவமே வேற எங்கேயாவது நடந்து இருக்கலாமோன்னும் சந்தேகங்களை எழுப்புறாங்க.

இந்த கேஸுல இன்னொரு தகவல் என்னன்னா, போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த வழக்கில் துப்பு துலக்க சந்தியாவின் ஆண் நண்பர் ஒருவர்தான் பெரிதும் உதவி உள்ளார்னு சொல்றாங்க.

இதுக்கிடையிலே, சந்தியாவின் தலை, கை மற்றும் உடல் பாகங்களை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவரது தலை கிடைக்காவிட்டாலும் கைரேகை மூலமாக அது சந்தியாதான் என்பதை நிரூபிக்கலாம் என கைரேகை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). இவரது மனைவி சந்தியா. பாலகிருஷ்ணன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். காதல் இலவசம் என்ற படத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து பெரும் நஷ்டமடைந்தவர். இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஏற்கெனவே சந்தியா மீது சந்தேகம் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அவரது ஆசையால் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் பேசி நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ அதற்கு மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தது.

அப்படி நடந்த ஒரு தகராறுல தான் பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை பண்ணதா போலிஸ் சொல்றாங்க. சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர்.

அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள். சந்தியாவுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பாலகிருஷ்ணன் கை காண்பித்த அடையாற்றில் இடங்களில் தேடியபோது இடுப்பு கீழ் வெட்டப்பட்ட பாகம் கிடைத்துள்ளது. இருப்பினும், ஆற்றில் தண்ணீரின் போக்கு அதிகமாக உள்ளதால், தலை மற்றும் இடது கை இருக்கும் மூட்டையை தேடுவதில் கடினம் ஏற்பட்டிருக்கிறது.