சமீராவின் கவர்ச்சி, ரசிகர்கள் அதிர்ச்சி

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை சமீரா ரெட்டி. அசல், வெடி, வேட்டை ஆகிய படங்களிலும் நடித்த இவர், தொழிலதிபர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் மணந்து கொண்டு செட்டில் ஆனார்.

ஏற்கனவே 4 வயது மகனுக்கு தாயான சமீரா தற்போது மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தனது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டி இருந்தார்கள். இன்னும் சிலரோ கர்ப்பிணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது என்று கேட்டனர்.

நெகட்டிவ் கமெண்ட்டுகளால் டென்ஷானான சமீரா அவர்களுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மற்றொரு, படு ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

“சமீரா தன் வயிறை பெருமையாக காட்டுவதை பார்த்து திட்டியவர்களுக்காகவே இப்படி ஒரு போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். சமீரா கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை,” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அவர்கள், “தனது செக்சியான ஆடை தன்னுடைய கணவருக்கே பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும் போது நெட்டிசன்கள் சமீரா ரெட்டியை கிண்டல் செய்வதும், கடுமையாக விமர்சிப்பதும் தவறு. பிரசவம் நெருங்கும் நேரத்தில் சமீராவுக்கு இந்த நெட்டிசன்களால் தேவையில்லாத மனஉளைச்சலில் உள்ளார்,” என்றனர்.

முதல் பிரசவத்திற்கு பிறகு சமீரா தான் 100 கிலோவுக்கு மேல் இருந்ததாக தெரிவித்தார். அதையும் நினைவூட்டி சமீராவை கிண்டல் செய்துள்ளனர் நெட்டிசன்கள். முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது சில பிரச்சனை ஏற்பட்டு மாதக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தார் சமீரா. நல்ல வேளையாக இந்த முறை அப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.