ஷாக்கை கிளப்பிய சமந்தா, அதிர்ச்சியில் அக்கினேனி அபிமானிகள்

வெள்ளிக்கிழமை வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் கிட்டதட்ட எல்லோருக்குமே சர்ச்சையான கதாபாத்திரம் தான் என்றாலும், சமந்தா ஏற்றுள்ள வேம்பு என்னும் வேடமும், அவர் பேசியுள்ள டயலாக்குகளும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கு.

அதுவும், சமந்தா தெலுங்கு தேசத்தில் மிகவும் மரியாதைக்குரிய அக்கினேனி குடும்பத்து மருமகள் என்பதால், அந்த குடும்பத்தின் அபிமானிகள் ஷாக்கில் உள்ளார்களாம். ‘நம்ம வீட்டு பொண்ணு எப்படி இப்படி நடிக்கலாம்’ என்று அவர்கள் கேட்கிறார்களாம்.

ஏற்கனவே சமந்தா ராம் சரணுடன் ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததே சர்ச்சையை கிளப்பிய நிலையில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் மேட்டர் காட்சியிலேயே நடித்துள்ளதால், இனி இப்படிப்பட்ட சீன்களில் நடிக்க வேண்டாம் என்று அந்த அபிமானிகள் செல்லமாக கடிந்து கொள்கிறார்களாம்.

ஆனால், சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் இதற்கெல்லாம் டோன்ட் கேராம். ‘தொழில் எது, சொந்த வாழ்க்கை எதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்கள் நல்ல புரிதலோடு, காதலோடு இருக்கிறோம். யாருக்கும் எங்கள் வாழ்க்கையிலோ வேலையிலோ தலையிடும் அதிகாரம் இல்லை’ என்கிறார்களாம்.

சமீபத்தில் சமந்தா மீடியாவிடம் பேசிய போது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார்.

சில தினங்களுக்கு முன் வெங்கடேஷின் இரண்டாவது மகளின் திருமணம் ஜெய்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வின் புகைப்படத்தை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதில் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி டக்குபட்டியும் கலந்து கொண்டார்.

“நானும் என் மாமியாரும் ஒரே போல் உடையில் வந்தோம். (திட்டமிட்டு செய்யவில்லை) அனைத்து முடிவுகளுக்கும் நாகசைதன்யா ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆண்கள் தன்னுடைய அம்மாவைப் போல் இருக்கும் பெண்களையே தேடுகிறார்களோ என்று தோன்றுகிறது” என்று கூறியிருந்தார்.