ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!

Aiyo Kadhaley - Video Song | With Love | Abishan Jeevinth | Anaswara Rajan | Madhan | Sean Roldan

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான  வித் லவ் ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான  “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல்  வெளியாகியுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்பாடலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும், ஒரு ஜாலியான, மனதுக்கு நெருக்கமான உணர்வை தரும் இப்பாடல், கேட்டவுடன் அந்த இசைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார்.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

Exit mobile version