நடிப்பு மற்றும் நடன வகுப்புகளுக்கான மெய்நிகர் ரிஸ்ஸில் ஸ்டுடியோ பயிற்சி பட்டறையை முற்றிலும் இலவசமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தியது

மிகச்சிறந்த அசல் உள்ளடக்கத்துடன் கூடிய சிறிய காணொளி செயலியான ரிஸில் திறமைகளை வளப்படுத்தவும் அடுத்த நிலைக்கு மேம்படுத்தவும்  உதவும் பொருட்டு  நடிப்பு மற்றும் நடன வகுப்புகளுக்கான மெய்நிகர் ரிஸ்ஸில் ஸ்டுடியோ பயிற்சி பட்டறையை முற்றிலும் இலவசமாக  சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி இலட்சக்கணக்கான நடன மற்றும் நாடக ஆர்வலர்களுக்கு தங்கள் வீடுகளில் இருந்துகொண்டே அவர்களின் திறன்களை மேம்படுதிக்கொள்ளும் வசதியை வழங்கி உதவுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிதி சிக்கல்களால் தங்கள் கனவுகளை கைவிட்டுவிடும் மாணவர்கள் மற்றும்  படைப்பாளிகளுக்கும் இது பயனளிக்கும்.

சமூக ஊடகங்களில் நட்சத்திர படைப்பாளர்களாக முயற்சிக்கும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் இந்த நடவடிக்கை பிற சிறிய காணொளி  செயலிகளில் இருந்து  ரிஸ்ஸிலை வேறுபடுத்திக் காட்டுகிறது. மாநிலத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக ஆயிரக்கணக்கான புதிய தலைமுறையினரை உருவாக்கும் நோக்கத்துடன், ரிஸில் ஸ்டுடியோஸ் வகுப்புகள் தமிழில் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நடன மற்றும் நடிப்பு ஆர்வலர்களை ஈர்ப்பதற்கும் மற்றும் தமிழ் படைப்பாளிகளை உள்நாட்டிலும் மற்றும் உலகளவிலும் பிரபலப்படுத்துவதற்கும் இந்த முயற்சி காரணமாக விளங்கும்.    .குறிப்பாக கலாச்சாரம் பற்றி, ரிஸ்ஸில் டான்ஸ் ஸ்டுடியோ மிகவும் கவனம் செலுத்துகிறது மற்றும் கோலிவுட் மாஸ் பீட்ஸ், தற்கால மற்றும் பிற பல்வேறு பிரபலமான நடன வடிவங்களில் மெய்நிகர் நடன பாடங்களை வழங்குகிறது.

மற்றொருபுறம், துணுக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும்/அல்லது படைப்பாற்றல் மிக்க காணொளிகளை உருவாக்க முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு நடிப்பு பாடங்களை ஆக்டிங் ஸ்டுடியோ வழங்குகிறது. இந்த பயிற்சிப் பட்டறைகள் வயது மற்றும் பாலினம் தொடர்பான எந்த தடையும் அற்று, அனைத்து படைப்பாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதூம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

.பயனர்கள் வெவ்வேறு நடன நகர்வுகள் மற்றும் வடிவங்களை உருவாக்கும் படைப்பாற்றல் முயற்சிகளுக்கு  தளத்தில் தூண்டுதல் அளிக்கும் விதமாக, உரிமம் பெற்ற இசைக்கோப்புக்களை தனது பயனர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தும் வகையில் தென்னிந்திய முன்னணி நிறுவனமான ஆதித்யா மியூசிக் உடனான கூட்டணியைத் சமீபத்தில் ரிஸ்ஸில் அறிமுகப்படுத்தியது. செயலியில் ஏற்கனவே கிடைக்கக்கூடிய விரிவான ஆங்கிலம் மற்றும் தமிழ் இசைக்கோப்பு நூலகத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட்டின் இந்திய பாடல்களின் விரிவான பட்டியலும் இந்த செயலியில் அமைந்துள்ளது.

நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரியான வித்யா நாராயணன் கூறினார்,  “படைப்பாளிகளுக்கு  மதிப்புக்கூட்டும் முயற்சியில் ரிஸ்ஸிலில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் .இந்தியா முழுவதிலுமிருந்து திறமைகளைக் கண்டறியவும் கூர்மைப்படுத்தவும் ரிஸில் ஸ்டுடியோஸ் உதவுகிறது. இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்கள் நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள்– அவர்களின் கனவுகளை நனவாக்க ரிஸ்ஸில் ஸ்டுடியோஸ் உதவும். இசையோடு ஒன்றிணைந்த ஒரு பொழுதுபோக்காக அனுபவிப்பதா அல்லது ஒரு தொழில்முறை நடிகராக இருப்பதற்கான பாதையை கண்டறிவதா, ஏதுவாக இருந்தாலும், ரிஸ்ஸில் ஸ்டுடியோவில் இணைய மக்களை நாங்கள் வரவேற்கிறோம், அவர்கள் விரும்பும் நட்சத்திரமாக மாறலாம். ”

நடிப்பு பயிற்றுனர் ஞானேஷ் ராஜ் கூறினார், “வளரும் கலைஞர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும் ரிஸ்ஸில் ஸ்டுடியோஸ் ஒரு தலைசிறந்த அருமையான வாய்ப்பு. ஒரு நிமிடத்தில் கலையை கற்றுக் கொள்ளவும், ஒரு பொறியை உருவாக்கவும் நீங்கள் எப்போதும் கனவு கண்டுகொண்டிருக்கிற உச்சத்தை அடையவும் இப்போது அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது,. ரிஸ்ஸில் ஒரு வழிகாட்டுனராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ”

ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் படைப்பாளிகள் குழுவை அமைக்கும் ரிஸல் ஸ்டுடியோஸின் முன்முயற்சிக்கு தேவையான தொழில்முறை பயிற்றுனர்கள் ரிஸ்ஸில் குழுவில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.. பயிற்சிப்பட்டறைகள் Zoom மூலம் இணையவழி காணொளியாக நடத்தப்படுகின்றன, கற்பவர்கள் தங்களின் முன்னேற்றத்தின் போது மேம்பட்ட நிலை வகுப்புகளுக்கு தர ஏற்றம் செய்து கொள்ளலாம்.

வளர்ந்துவரும் இளம் படைப்பாளியான மணி மேலும் கூறுகிறார்,  “ரிஸ்ஸில் போன்ற மிக அருமையான தளத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பூரிப்படைக்கிறேன். எனக்கும் மற்றும் இதர நபர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்துவத்தை கண்டறிவதற்கு இது ஒரு சிறந்த வெளியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு மிகச்சிறந்த இடம்.