“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.

இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Yuvraaj.PRO

Share this:

Exit mobile version