“ Reliance Foundation Announces “womenconnect Challenge India” Grantees”

ORGANIZATIONS FUNDED FOR WOMEN’S TECHNOLOGY EMPOWERMENT
● Joint initiative launched by Reliance Foundation and USAID to help identify innovative solutions to close the gender digital divide ● Grantees will work across 17 states, reaching 3 lakh (300,000) women and girls ● Reliance Foundation is providing Rs 8.5 crore (over $1.1 million USD) in grants for the WomenConnect Challenge India initiative
Ten organizations across India have been selected as grantees through the WomenConnect Challenge India, launched by Reliance Foundation and the U.S. Agency for International Development (USAID). Through this initiative, over Rs 11 crores (over $1.5 million USD) has been invested to help close the gender digital divide and of this, Reliance Foundation has supported Rs 8.5 crore (over $1.1 million USD) in grants for projects for creating innovative solutions to address the issue. Over 3 lakh (300,000) women and girls across 17 states will benefit from initiatives to close the gender digital divide and increase women’s economic empowerment through technology.
Speaking on the announcement, Smt. Nita M Ambani, Founder-Chairperson, Reliance Foundation, said, “It has been our mission to enable and empower women in every walk of life. When we launched Jio, we envisioned a digital revolution that will be an equal opportunity revolution. Through Jio, we have been providing affordable connectivity across the length and breadth of our country. Reliance Foundation has also been working in partnership with USAID towards bridging the gender digital divide in India. Technology is a powerful means to address and eliminate inequality. I congratulate and welcome on board the ten winners of our Women Connect Challenge India on this journey of transformation.”
The ten grantees are Anudip Foundation, Barefoot College International, Centre for Youth and Social Development, Friends of Women’s World Banking, Naandi Foundation, Professional Assistance for Development Action, Society for Development Alternatives, Solidaridad Regional Expertise Centre, TNS India Foundation and ZMQ Development. The solutions address women farmers, entrepreneurs, members of Self-Help Groups to address social and cultural barriers to bridge the gender digital divide.
The Women Connect Challenge India was launched in August 2020. From a pool of over 180 applications, 10 organisations were selected with grants between INR 75 lakhs to 1 crore each ($100,000 – $135,000), for over a period of 12 to 15 months. In January 2021, USAID and Reliance Foundation jointly hosted a Solvers Symposium bringing together semi-finalists and external experts for capacity building while brainstorming on the gender digital divide in India.

Mobile internet awareness has been increasing each year among women. While in 2017 only 19% of women in India were aware of mobile internet; in 2020 this increased to 53%. In terms of ownership, 67% of women own a mobile phone compared to 79% men. Through the years, initiatives by Reliance Foundation have aimed to bridge the digital divide. Through Reliance Jio, over 1.3 billion Indians saw a pan-India digital revolution that transformed lives. Today, Jio is the largest digital services company in India, and the second largest in the world, with 120 million women Jio users, and the number is growing rapidly to bridge the digital divide.
The Women Connect Challenge is a global call for solutions to improve women’s participation in everyday life by meaningfully changing the ways women access and use technology. USAID has partnered with Reliance Foundation to support new approaches that close the gender digital divide in India and new grantees will focus on proven strategies from previous Women Connect rounds to increase women’s economic empowerment.

பெண்களின் தொழில்நுட்ப திறனதிகாரத்திற்காக 10 அமைப்புகளுக்கு நிதியுதவியை வழங்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் விமன்கனெக்ட் சேலஞ்ச் இந்தியா.

 ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் சர்வதேச முன்னேற்றத்திற்கான யுஎஸ். ஏஜென்சி (USAID) ஆகியவற்றால் தொடங்கப்பட்டிருக்கும் விமன்கனெக்ட் சேஞ்ச் இந்தியா வழியாக, நிதி உதவி பெறுபவர்களாக இந்தியாவெங்கிலுமிருந்து 10 அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முனைப்புத்திட்டத்தின் வழியாக பாலினம் சார்ந்த டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கு உதவ, ரூபாய் 11 கோடிக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், இப்பிரச்சனைக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான செயல்திட்டங்களுக்கு 8.5 கோடி ரூபாய் நிதி ஆதரவை ரிலையன்ஸ் ஃபவண்டேஷன் வழங்கியிருக்கிறது. பாலின ரீதியிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கான இந்த திட்டங்களிலிருந்து 3 லட்சத்திற்கும் (300,000) அதிகமான பெண்களும், சிறுமிகளும் பயனடைவார்கள். தொழில்நுட்பத்தின் வழியாக பெண்களின் பொருளாதார திறனதிகாரம் பெறும் நிலையை இது அதிகரிக்கும்.

ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் – தலைவர் திருமதி. நீட்டா எம். அம்பானி, இந்த அறிவிப்பு தொடர்பாக கூறியதாவது: “வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த பெண்கள் திறனதிகாரம் பெறுமாறு ஏதுவாக்குவது எமது செயல்திட்டமாக இருந்து வந்திருக்கிறது. ஜியோவை நாங்கள் தொடங்கியபோது ஒரு சமவாய்ப்புள்ள புரட்சியாக இருக்கின்ற ஒரு டிஜிட்டல் புரட்சியையே நாங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தோம். ஜியோ வழியாக நமது நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் எளிய கட்டணத்தில் டிஜிட்டல் இணைப்புவசதியை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்தியாவில் பாலினம் சார்ந்த டிஜிட்டல் இடைவெளியை நிரப்பும் குறிக்கோளை நோக்கி, USAID அமைப்புடன் கூட்டாண்மையாகவும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் செயலாற்றி வந்திருக்கிறது. சமத்துவமின்மையை எதிர்கொள்ளவும் மற்றும் ஒழிக்கவும் ஒரு தொழில்நுட்பம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கிறது. இந்த சிறப்பான உருமாற்றத்திற்கான பயணத்தில் எமது விமன்கனெக்ட் சேலஞ்ச் இந்தியாவின் 10 வெற்றியாளர்களை நான் பாராட்டி மகிழ்கிறேன் மற்றும் இணைந்து செயல்பட வரவேற்கிறேன்.”

அனுதீப் ஃபவுண்டேஷன், பேர்ஃபூட் காலேஜ் இன்டர்நேஷனல், சென்டர் ஃபார் யூத் அண்டு சோஷியல் டெவலப்மெண்ட், ஃபிரண்ட்ஸ் ஆஃப் விமன்ஸ் வேர்ல்டு பேங்கிங், நாந்தி ஃபவுண்டேஷன், புரொஃபஷனல் அசிஸ்டன்ஸ் ஃபார் டெவெலப்மெண்ட் ஆக்‌ஷன், சொசைட்டி ஃபார் டெவலப்மெண்ட் ஆல்டர்நேட்டிவ்ஸ், சாலிடாரிடார் ரீஜினல் எக்ஸ்பெர்டிஸ் சென்டர், டிஎன்எஸ் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ZMQ டெவெலப்மெண்ட் ஆகியவை நிதி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 அமைப்புகளாகும். பாலின ரீதியிலான டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கு தடையாக உள்ள சமூக மற்றும் கலாச்சார தடைகளை எதிர்கொள்ள பெண் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் பயனடையுமாறு இத்தீர்வுகள் இருக்கும்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தி விமன்கனெக்ட் சேலஞ்ச் இந்தியா தொடங்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற 180-க்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்து, ஒவ்வொரு அமைப்பிற்கும் ரூ.75 இலட்சத்திலிருந்து, ரூபாய். 1 கோடிக்கு இடைப்பட்ட ($100,000 – $135,000) மானியத்தொகையைப் பெறுவதற்கு 10 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 12 முதல் 15 மாதங்கள் என்ற காலஅளவில் இத்தொகை செலவிடப்படும். 2021 ஜனவரி மாதத்தில், யுஎஸ்ஏ மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை ஒருங்கிணைந்து, தீர்வு காண்பதற்கான ஒரு கருத்தரங்கை நடத்தின. இந்தியாவில் பாலினம் சார்ந்த டிஜிட்டல் இடைவெளி பற்றி விவாதித்த இக்கருத்தரங்கில் அரையிறுதி நிலைக்காக தேர்வு செய்யப்பட்ட அமைப்புகளும் மற்றும் வெளியார்ந்த வல்லுனர்களும் ஒன்றுசேர்ந்து பங்கேற்றனர்.

பெண்கள் மத்தியில் மொபைல் இன்டர்நெட் மீதான விழிப்புணர்வு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் 19 சதவிகித பெண்கள் மட்டுமே மொபைல் இன்டர்நெட் குறித்து அறிந்திருந்தபோது, 2020 ஆம் ஆண்டில் இது 53% ஆக அதிகரித்திருந்தது. மொபைல் போன்களை சொந்தமாக வைத்திருப்பதைப் பொறுத்தவரை ஆண்களில் 79% ஆக இருப்பதுடன் ஒப்பிடுகையில், 67% பெண்களே மொபைல் போன் வைத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் எடுத்த முயற்சிகள், இந்த டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதை இலக்காகக் கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ வழியாக, 1.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள், அவர்களது வாழ்க்கையையே உருமாற்றம் செய்திருக்கின்ற இந்தியா முழுவதற்குமான ஒரு டிஜிட்டல் புரட்சி நிகழ்வதைக் கண்டனர். இன்றைக்கு டிஜிட்டல் சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் மற்றும் உலகளவில் இரண்டாவது நிறுவனமாகவும் ஜியோ திகழ்கிறது. ஜியோ பயனாளிகளில் பெண்களின் எண்ணிக்கை 120 மில்லியன் ஆகும். டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்காக இந்த எண்ணிக்கை அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

தி விமன்கனெக்ட் சேலஞ்ச் என்பது, தொழில்நுட்பத்தை பெண்கள் அணுகிப்பெற்று பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அர்த்தமுள்ள வகையில் மாற்றுவதன் மூலம் தினசரி வாழ்க்கையில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான தீர்ப்புகளை கண்டறிவதற்கான ஒரு உலகளாவிய அறைகூவலே தி விமன்கனெக்ட் சேலஞ்ச் என்பதாகும். இந்தியாவில் பாலினம் சார்ந்த டிஜிட்டல் இடைவெளியை நிரப்புவதற்கான புதிய அணுகுமுறைகளுக்கு ஆதரவளிக்க ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உடன் யுஎஸ்ஏ கூட்டாண்மையாக இணைந்து செயல்படுகிறது. பெண்கள் பொருளாதார திறனதிகாரம் பெறும் அளவை அதிகரிக்க முந்தைய விமன்கனெக்ட் சுற்றுகளிலிருந்து நிரூபிக்கப்பட்ட செயல் உத்திகள் மீது இப்போது இந்த புதிய நிதி உதவியைப் பெறும் அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்தும்.

 USAID குறித்து

USAID என்பது, உலகின் முதன்மையான சர்வதேச வளர்ச்சி முகமையாகும். முன்னேற்றத்திற்கான விளைவுகளை முன்னெடுப்பதில் முக்கிய செயலூக்கியாக இது செயல்படுகிறது. வாழ்க்கைத் தரங்களை உயர்த்த உதவவும், சமூகங்களை கட்டமைக்கவும், ஜனநாயகத்தை வளர்க்கவும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் திறனதிகாரம் பெறும் குறிக்கோளை செயலாக்கவும் USAID பணியாற்றுகிறது. யுஎஸ்ஏ – ன் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழுமையை முன்னேற்றுவதற்காக பணியாற்றி வரும் யுஎஸ்ஏ, அமெரிக்காவின் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. பிற நாடுகள் அவர்களது வளர்ச்சி பயணத்தில் முன்னேற்றம் காண இது உதவுகிறது.

இன்றைய காலம் வரை, தொழில்நுட்பத்திற்கான பெண்களின் அணுகுவசதியை மட்டுப்படுத்துகின்ற தடைகளை எதிர்கொள்வதற்காக பணியாற்ற மூன்று வெவ்வேறு சுற்றுகளில் மொத்தத்தில் 16 விமன்கனெக்ட் சேலஞ்ச், நிதி ஆதரவு பெற்ற அமைப்புகளை USAID கொண்டிருக்கிறது. 16 நாடுகளில், ஏறுக்குறைய 6 மில்லியன் பெண்கள் திறனதிகாரம் பெற இது உதவி வருகிறது. 2018 ஆம் ஆண்டில் விமன்கனெக்ட்டின் முதல் சுற்று 9 மானியங்களை வழங்கியது மற்றும் 2019 ஆம் ஆண்டில் விமன்கனெக்ட்டின் இரண்டாம் சுற்று 3 அமைப்புகளுக்கு இதை வழங்கியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் விமன்கனெக்ட் மூன்றாவது சுற்றுக்காக 4 வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

 ரிலையன்ஸ் பவுண்டேஷன் குறித்து :

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் அறப்பணிகளுக்கான செயல் பிரிவாக இயங்கும் ரிலையன்ஸ் பவுண்டேஷன், புத்தாக்கமான மற்றும் நிலைக்கத்தக்க தீர்வுகள் வழியாக இத்தேசத்தின் முன்னேற்றத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில் ஒரு வினையூக்கமுள்ள பங்கினை ஆற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதன் நிறுவனரும் மற்றும் தலைவருமான திருமதி. நீட்டா அம்பானி அவர்களின் திறன்மிக்க தலைமையின்கீழ், இந்த அறக்கட்டளையானது, இத்தேசத்தின் சமூக முதலீட்டை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் உயர்தரமான வாழ்க்கைத் தரத்தையும் மற்றும் ஒட்டுமொத்த நலனையும் உறுதிசெய்வதற்காக முழுமையான மாற்றத்தை ஏதுவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு விடாமுயற்சியோடு சேவையாற்றி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சமூக சேவை செயல்நடவடிக்கைகளுள் ஒன்றான இந்த அறக்கட்டளையானது, ஊரக உருமாற்றம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற புதுப்பிப்பு மற்றும் கலைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய துறைகளில் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கான சவால்களுக்குத் தீர்வுகாண கூர்நோக்கம் கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையின் நேரடியான, அணுகுமுறையானது, இந்தியாவெங்கும் 44700-க்கும் கூடுதலான கிராமங்கள் மற்றும் நகர்ப்புற அமைவிடங்களில் 51 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள் ஏற்பட உதவியிருக்கிறது.
மேலும் அறிய: www.reliancefoundation.org

Share this:

Exit mobile version