பழகிய நாட்கள் இயக்குனர் ராம்தேவ் பதிவு

தமிழ் திரையுலகினர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்..
🙏 தாய் தான் சுமந்து    கொண்டிருக்கும் குழந்தையை  பிரசவிக்க முடியாத வேதனை எப்பேர்பட்டதோ அந்த வேதனையில் பதிவிடுகிறேன் ஆயிரத்தை தாண்டாத பிளாட்பார்மில் வியாபாரம் பண்ணுகிறவர்கள் கூட ஒற்றுமை ஒழுங்குமுறை வைத்துள்ளார்கள் கோடிகளில் வியாபாரம் பண்ணும் தயாரிப்பாளர்கள் ஆகிய நம்மிடம் ஒற்றுமை ஒழுங்குமுறை இல்லை என்பதை நினைத்து வேதனையாக உள்ளது நான் தெரியாமல்தான் கேட்கிறேன் முகம் தெரிந்த நடிகர்கள் நடித்த படங்கள் வைத்துள்ள நீங்கள் 300 400 தியேட்டர்களை பிடித்துக் கொள்கிறீர்கள் சரி அந்த தியேட்டர்கள் எல்லாம் படம் ஓடுகிறதா என்றால் Show Break என்று பதில் வருகிறது இப்படி செய்வதால் என்னை மாதிரி சிறு பட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறோம் எல்லா படங்களுக்கும் குறைந்த அளவில் தியேட்டரை எடுங்கள் அதில் எந்த படம்  ஓடுகிறதோ அதை அதிக தியேட்டர்களில் உயர்த்துங்கள் இதைக் கேட்டால் புதுமுகங்களுக்கு ஓப்பனிங் இல்லை என்று கூறுகிறீர்கள் இங்கே வெற்றி பெற்றவர்கள் அனைவருமே புது முகமாய் வந்தவர்கள் தானே வானத்திலிருந்து    குதித்தவர்களா? பெற்ற தாய் தான் பெற்றெடுத்த பிள்ளை எல்லோரிடத்திலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இல்லை அந்தத் தாய் அன்போடு தியேட்டர் அதிபர்களும் என்னை மாதிரி சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு பழகிய நாட்கள் தயாரிப்பாளர்