இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்? ரகுல் ப்ரீத்தின் ரவுசு

பரபரவென கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் முன்னணிக்கு முன்னேறிய ரகுல் ப்ரீத் சிங், அனைவரையும் திருப்திபடுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வதந்திகளுக்கு பயப்பட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் சிங் நடிப்பில் சூர்யாவின் என்ஜிகே படம் சமீபத்தில் ரிலீசாகி இருந்த‌ நிலையில், நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதாகவும், கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் பஞ்சாபி பியூட்டி ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்.

“சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே… எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், “சிலர் என்னைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர். அதுபோன்ற வதந்திகளை கண்டு பயப்படும் ஆள் நானில்லை. என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரத்திற்கு வருவேன்.

என்னை தாக்க வேண்டும் என்று எண்ணினால் நேரடியாக வாருங்கள் பார்க்கலாம்,” என்று கூறியுள்ளார். இந்த ஆண்டில் சூர்யாவுடன் என்ஜிகே தவிர‌, சிவகார்த்திகேயனுடன் புதியபடம் என 2 தமிழ் மற்றும் 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

“நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடன் படம் பண்ணுகிறேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதில் என் கதாபாத்திரம் எந்த அளவுக்கு அழுத்தமாக இருக்கிறது என்று பார்ப்பேன்.

எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `டெ டெ பியார் டெ’யில் கவர்ச்சி வேடம் பண்ணியிருக்கேன். காரணம், அந்த படத்துல எனக்கு முக்கியத்துவம் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ… நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்,” என்று சமிபத்தில் ஒரு பேட்டியில் ரகுல் கூறியிருக்கிறார்.

யோகா தினத்தை முன்னிட்டு ரகுல் ப்ரீத்தி சிங் தனது யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவர் யோகா பற்றி கூறுகையில் நான் தலை கீழாகப் பார்க்கும் போது தான் உலகம் நேராக தெரிகிறது. யோகா செய்யும் போது மனதில் அமைதி, நிம்மதி மற்றும் வாழ்க்கையில் பெரும் சந்தோசத்தை அடைவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.