பழிக்கு பழி வாங்கப் போகும் ரஜினி, பீதியில் ஸ்டாலின்

‘நீ என்னை மறுபடியும் தொட்டிருக்கக் கூடாது சிங்காரம். என்னை தொட்டவனை நான் விட்டதில்லை’னு ரஜினி பேட்ட படத்துல பேசுன வசனம் நிஜமாகப்போகுதாம். ரஜினி மக்கள் மன்றத்தோட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் டி மதியழகன் தலைமையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதுவும், இந்த இணைப்பு என்னிக்கு நடந்துச்சுன்னா, ரஜினியோட இளைய மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு அன்னிக்கு நடந்துச்சு.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் முன்னிலையில் “ரஜினி மக்கள் மன்றத்தைச்” சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23-2-2019 அன்று கிருஷ்ணகிரியில் திமுகவில் இணையும் “கழகத்தில் இணையும் விழா” நடைபெற உள்ளது.

கடந்த சில மாதங்களாக தினகரன் கட்சியிலிருக்கும் முக்கிய புள்ளிகளை தட்டித் தூக்கிவந்த திமுக, தற்போது ரஜினி தலையில் கை வைத்துள்ளது, அதுவும் ரஜினியின் சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை மொத்தமாக திமுகவிற்கு வாரி போட்டுள்ளது. இதெல்லாம் ரஜினிக்கு ரொம்பவே கடுப்பை கிளப்பி இருக்காம்.

இதுக்கு பதிலடி கொடுத்தே ஆகனும்ன்ற முடிவுல இருக்கிற சூப்பர் ஸ்டார், தன் மகள் சவுந்தர்யா திருமணம் முடியட்டும்னு காத்துட்டு இருக்காராம். ஏற்கனவே திமுகவுல இருக்கிற சில முக்கிய தலைகள் ரஜினி கட்சியில சேர தூது விட்டருக்கிற நிலையில, அவங்களையெல்லாம் கட்சி ஆரம்பிக்கிற வரைக்கும் அவசரம் வேண்டாம்னு வெயிட் பண்ண சொன்ன ரஜினி, இப்போ உடன்டியா ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்னு இருக்கிறாராம்.

திமுகவுல பல் வேறு மட்டங்களில பரபரப்பு கிளப்ப போற அந்த அதிர்ச்சி ஆபரேஷன் விரைவிலியே அரங்கேறும்னு பேசிக்கிறாங்க. இதை எப்படியோ மோப்பம் பிடிச்ச ஸ்டாலின், இதை எப்படி சமாளிக்கலாம்னு தன்னோட தளபதிகள் கூட ஆலோசிச்சிட்டு வர்றாரம். ஆக, பேட்ட பராக்னு தான் அரசியல் வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.

இதனிடையே, இன்று சவுந்தர்யா திருமணத்துல முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகிட்டாங்க. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் ரஜினி. தனது நண்பரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரஜினி நேரில் அழைப்பு விடுத்தார்.

அந்த வரிசையில், தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்தார் ரஜினி.