ராகுல் காந்தியின் கேள்வி‍ பதில்: க்யா ரே செட்டிங்கா?

நேற்று சென்னையில் கல்லூரி மாணவிகளிடம் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இவை எல்லாம் இயற்கையா நடந்த மாதிரி இருந்த போதிலும், எல்லாமே பக்கா ப்ரீ பிளான்ட்டாம்.

இந்த மாணவிகள் தான் கேள்வி கேக்கணும், இவ்வளவு கேள்விகள் தான் கேக்கணும், இந்த கேள்விகள் தான் கேக்கணும் என்று டில்லியில் இருந்து ஏற்கனவே ஸ்கிரிப்ட்டும் வந்து, ரிகர்சலும் பார்க்கப்பட்டதாம். இதெல்லாமே ராகுல் இமேஜை பூஸ்ட் செய்ய நியமிக்கப்பட்டுள்ள் ஸ்பெஷல் டீமோட வேலையாம்.

மாணவி ஒருவர், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, பாலின சமத்துவமின்மை குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராகுல், “பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியா சிறப்பாக விளங்குகிறது.

இது உண்மை. நீங்கள் உத்தரப் பிரதேசத்துக்கோ, பிஹாருக்கோ சென்றால், அங்கு பெண்கள் நடத்தப்படும் விதங்களைக் கண்டு அதிர்ந்து போவீர்கள். பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கலாச்சாரத்துக்கான முன்னோடிகளில் ஒன்று தமிழகம்,” என்றார். இந்த கேள்வியும் பதிலும் தமிழ்நாட்டு தாய்மார்களை கவருவதற்காக தயாரிக்கப்பட்டதாம்.

பொதுவாக வெள்ளை குர்தா அணிந்தபடியே ராகுல் காந்தியை பல மேடைகளில் பார்த்திருந்தோம். ஆனால் நேற்றைய கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்துவந்தது அனைவருக்கும் வியப்பான ஒன்றாக இருந்தது. இது கூட யூத் ஆடியன்ஸை அட்ராக்ட் செய்வதற்கான திட்டமாம்.

மாணவிகளுக்கு மத்தியில் மேடையில் நடந்து கொண்டே பேசிய அவர், மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார். சார் என்று அழைத்த மாணவியிடம், ராகுல் என்று அழைத்தால் போதும் என்றார். அதற்கு, கோரசாக கத்தி மாணவிகள் உற்சாகமளித்தனர்.

பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது ராகுல், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்னும் நம்பிக்கையை உங்களுக்கு தெரிவித்து எனது பேச்சை தொடங்குகிறேன்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்துவிட்டாலும் நம்முடன் இருக்கிறார். அவர் மறைந்து விடவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளில், தமிழக வரலாற்றில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்றார்.