#பாரதிராஜா இயக்கிய #கிழக்கேபோகும்ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று 43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள்.

#10ஆகஸ்டு1978 #பாரதிராஜா இயக்கிய  #கிழக்கேபோகும்ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று (10.8.21) ,43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள். 
டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார். 43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் படபிடிப்பு இடைவேளையில் சர்பிரைசாக கேக் கொண்டுவரப்பட்டு பாட்டு பாடி உற்சாகமாகக் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ராதிகா அவர்களுக்கு டைரக்டர் ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள். 
ராதிகா நாயகியாக அறிமுகி 43வருடம் நிறைவை ஒட்டி, @DrumsticksProd #AV33 காரைக்குடி படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.ராதிகாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
*vrcs