ஆர். கே. சுரேஷ் நடிக்கும் “காடுவெட்டி” சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் ” காடுவெட்டி “

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் ” காடுவெட்டி “

ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சங்கீர்த்தனா மற்றும் விஷ்மியா இருவரும் கதா நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுப்ரமணியசிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோறும் நடித்துள்ளனர்.

இசை – ஸ்ரீகாந்த் தேவா,பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்.,ஒளிப்பதிவு – M. புகழேந்தி,பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.,கலை இயக்கம் – வீரசமர்,எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்,ஸ்டண்ட் – கனல் கண்ணன்
நடனம் – தினேஷ்.,தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி.,மக்கள் தொடர்பு – மணவை புவன்,தயாரிப்பு – மஞ்சள் ஸ்கிரீன்ஸ்,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம்.

படம் பற்றி இயக்குனர் சோலை ஆறுமுகம் பகிர்ந்தவை…

மறுமலர்ச்சி,சிந்துநதிப் பூ,ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்குப் பிறகு வடமாவட்ட வாழ்வியலை சொல்லும் படம்தான் காடுவெட்டி,

மன்னர்கள் போர் செய்த காலத்தில் போர்வீரர்கள் போர் பயிற்சிக்காக இடங்களை தேர்வு செய்து காடுகளை வெட்டினார்கள்,வெட்டிய நிலங்களில் பாதியை போர் பயிற்சிக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர்,போர்க்கால முடிவுக்குப் பிறகு அந்த நிலங்கள் ஊர்களாக மாறியது,அந்த ஊர்களுக்கு காடுவெட்டி என பெயரிட்டனர்,விவசாயம் செய்த தமிழ் பூர்வக்குடிகளின் கதை என்பதால் காடுவெட்டி என படத்திற்கு பெயர் வைத்தோம்.

கல்வியறிவும் பொருளாதார மேம்பாடும் இருந்தால் மட்டுமே பிழைப்புவாத அரசியலிடமிருந்து சாமானிய மக்கள் தங்களை காபாற்றிக்கொள்ள முடியும்.

மனித சமூகத்தின் வேறுபாடுகளை நேர்மையான பாதைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும்,குறுக்குவழி வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

காதலோட வலியை சொல்ல ஆயிரம் படம் இருக்கு,பெத்தவங்களோட வலியை சொல்ல ஒன்னு ரெண்டு படங்கள்தான் இருக்கு,அந்த ஒன்னு ரெண்டு படத்துல இந்த படமும் இருக்கும் என்றார் இயக்குனர் சோலை.

Share this:

Exit mobile version