Pudhuyugam Tv program Thirukkural 100

‘திருக்குறள் 100’

சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று  காலை 10 :00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி ,பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியுள்ளார்.

 ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்

இதனையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் .. நடிகர் சிவக்குமார் பேசியதாவது…

40 ஆண்டுகள் திரைப்படங்களில் பணியாற்றினேன். நாடகங்களில் சின்னதிரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் மேக்கப் போட்டு நடிப்பதில்லை முடிவெடுத்தேன். ஸ்டாலின் குணசேகரன் 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை எந்த கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார்கள் அவர்கள் தான் என்னை மேடைப்பேச்சுக்கு அழைத்து வந்தார்கள்.

இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்பராமாயணம் மொத்த கதையையும் 100பாடல்கள் வழியாக விளக்கிப் பேசியது நான் தான் என இப்போது கூறுகிறார்கள் அது மிகப்பெரும் மகிழ்ச்சி. மகாபாரதத்தை 2.10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன் இவையெல்லாம் இப்போது யூடுயூப் தளத்தில் கிடைக்கிறது. இப்போது திருக்குறளைத் தொடங்கியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். 3 .1/2 வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன்.புதுயுகம் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Share this:

Exit mobile version