Pudhuyugam Tv new cookery program Rusikalaam vaanga

புதுப்பொலிவுடன் துவங்கும் “ருசிக்கலாம் வாங்க”

உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மதியம் 1.00மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’  நேயர்களிடம்  மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது .

பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை புதுயுக இல்லத்தரசிகள்,  சிறுவர்கள் மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் சமைத்துக்காட்ட சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு வித விதமாக சமைத்து காட்டுவார்கள் .

இது மட்டுமின்றி அன்றாடம்  உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள்  அறியாத விஷயங்களும் , சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. புதியதாக அமைக்கப்பட்ட அரங்கில் புதுப்பொலிவுடன் துவங்கும்‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியை ஆர்த்தி  தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை மதியம் 1:00 மணிக்கு உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டு ருசிக்கலாம் வாங்க…