*Pudhuyugam Devotional Program Aalaya valam*

“ஆலயவலம்”

கோவில்களின் கருவூலமாகத் திகழும் தமிழகத்தில் தேவார மூவரால் பாடல் பெற்ற சிவாலயங்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்யதேசங்கள், திருப்புகழில் போற்றப்பட்டுள்ள திருக்குமரன் கோவில்கள், அருளாட்சி நடத்தும் அம்மன் ஆலயங்கள் என பல்லாயிரக்கணக்கான திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயங்களின் ஆன்மிகச் சிறப்புகள்,  ஸ்தல புராணம், வரலாற்றுத் தகவல்கள், பாடல் விளக்கங்கள், கலையம்சங்கள்,  பரிகாரப் பலன்கள், கோவில் திருவிழாக்கள்,  அமைவிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுவைபடத் தருகின்ற நிகழ்ச்சியே ஆலயவலம். 

ஆலயத்தை நேரடியாக வலம் வருவதைப் போன்ற அனுபவத்தைத் தரும் கோவில்களின் கலைக்களஞ்சியமான இந்நிகழ்ச்சியை மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பத்மன் தொகுத்தளிக்கிறார்.

*ஆலயவலம் * நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு காலை 10 :00மணிக்கு… கும்பகோணம், நல்லூர், அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்… நமது புதுயுகத்தில் காணத்தவறாதீர்கள்…

Share this:

Exit mobile version