Pudhuyugam cookery program Rusikalaam vaanga
‘ருசிக்கலாம் வாங்க’
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் புத்தம் புது சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12.30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது .
பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் மற்றும் முன்னணி சமையல் கலைஞர்கள் பங்குபெறும் பாரம்பரிய உணவுவகைகள் முதல் பாஸ்ட் புட் உணவு வகைகள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமையல் கலைஞர்கள் பங்குபெறுகின்றனர். யோகாம்பாள் சுந்தர் பாரம்பரிய உணவு வகைகளையும் ,மற்ற முன்னணி சமையல் கலைஞர்கள் விதவிதமான சைவம் அசைவம் என நாவில் ருசி ஏற்படுத்தும் புதுவகையான உணவு வகைகளை தயாரித்து காட்டுகின்றனர் .
இது மட்டுமின்றி அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள் அறியாத விஷயங்களும் , சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் இடம்பெறும் இந்நிகழ்ச்சியை மீனாட்சி தொகுத்து வழங்குகிறார்.