நட்பா? காதலா? நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நடிகை

கண்ணடிக்கும் வைரல் வீடியோவாலும் ஒரு அடார் லவ் படம் மூலமும் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், காதலில் விழுந்திருப்பதாக கேரளா முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.

யார் அந்த லக்கி பாய் என்று விசாரித்த போது, ஒரு அடார் லவ் மலையாள படத்தில் பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக நடித்த ரோ‌ஷனுடன் அவர் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரியாவோ இதை மறுத்திருக்கிறார். “சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகி விட்டது. அது நீண்ட நாள் தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

அப்போது பிரியாவுக்கும் ரோஷனுக்கும் நடுவில் எதுவுமே இல்லையா எனக் கேட்டதற்கு, “எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்னையும் ரோ‌ஷனையும் ஜோடியாக வைத்து படங்கள் எடுக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவ்வளவு தான்”, என்றார்.

ஒரு அடார் லவ் படத்தின் மாணிக்ய மலராய பூவி பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டானார்.

பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், அவர் பற்றிய தகவல்கள் கூகுளில் அதிகமாக தேடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்தார் பிரியா வாரியர்.

அதன் பின் அந்தப் படம் வெளியான நேரத்தில் முத்தக் காட்சிக்கும் பிரியா வாரியர் ட்ரோல் செய்யப்பட்டார். 2018ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா வாரியர் இடம் பெற்றார்.