ஜெயா டிவியின்  பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் (14-01-22)

ஜெயா டிவியில் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு  ‘மங்கல இசையுடன்’   ’ பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது .

காலை 8:30 மணிக்கு நான் நானாக நகைச்சுவை நடிகர் ரெடின் உடன் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி.

காலை 9:00 மணிக்கு புலவர் சண்முகவடிவேல் தலைமையில் நகைச்சுவை பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு நகைச்சுவை அரங்கம்…‘பொங்கும் சிரிப்பு மன்றம்’.

காலை 10.30 மணிக்கு இசைஞானி இளையராஜா பங்குபெறும் புத்தம்புதிய நிகழ்ச்சியின் முன்னோட்டம் ‘கத கேளு, கத கேளு’ ஒளிபரப்பாகிறது .

மேலும் பகல் 12:00 மணிக்கு சமூக வலைதள பிரபலங்கள் பங்கு பெரும் ‘ஜமாய் பொங்கல்’ என்ற விறுவிறுப்பான விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது .

மாலை 5:00 மணிக்கு மகர ஜோதி சபரிமலை ஐயப்பனின் ‘அருளொளி தரிசனம்’  ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது .

மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் (15-01-2022)

ஜனவரி 15 சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 7:30 மணிக்கு பொங்கல் தினத்தன்று வெளியாகும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் நடிகர்கள் சதிஷ், பவித்ரா மற்றும் திரைப்பட குழுவினருடன் ஜாலி சாட் ஒளிபரப்பாகிறது .

காலை 8:30 மணிக்கு ஜெயா டிவியின் சமையல் கலைஞர்கள் பங்குபெற்று கலக்கும் ‘கலாட்டா கிச்சன்’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் .

காலை 9:30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம்.

காலை 11:00 மணிக்கு’வைகறை பொங்கல்’ கிராமிய இசையா? திரை இசையா? கிரேஸ் கருணாஸ் மற்றும்  வேல்முருகன் குழுக்கள் மோதும் போட்டா போட்டி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் .

 பகல் 12:00  மணிக்கு RRRஸ்பெஷல் ஜூனியர் NTR, ராம் சரண் மற்றும் இயக்குனர் ராஜமெளலியுடன் ஓர்  ஜாலி சந்திப்பு.லை 5:00 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் அசத்தலான ‘நகைச்சுவை சிரிப்பு மன்றமும் , இறுதி நிகழ்ச்சியாக இரவு 10:00 மணிக்கு ‘சாய் வித் செலிப்ரிட்டி’ இந்நிகழ்ச்சியை நடிகை சாக்க்ஷி அகர்வால்   ஜாலியான சாட்டுடன் அடிக்கும் லூட்டி அட்டகாசம், நிறைந்த நிகழ்ச்சியாக அமைந்திருக்கும். .

 

Share this:

Exit mobile version