பெப்பர்ஸ் தொலைக்காட்சியின் பொங்கல் கொண்டாட்டம்

பெப்பர்ஸ் டிவியில் பொங்கலன்று காலை 8:30 மணிக்கு பிரபல ஜோதிடர் பண்டிட். காழியூர் நாராயணன் கொண்டாடும் ‘உழவர் திருநாள்’ . இதில் உழவர் முக்கியத்துவத்தையும் ,பொங்கல் திருநாள் எப்படி வந்தது ,விவசாயிகள் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை விளக்குகிறார் .

காலை 9:30 மணிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National disaster management authority) பிரதமர் மோடியின் நேரடி நியமிப்பில் ஆலோசகராக திகழும் திருப்புகழ் (I.A.S)அவர்களின் மனதை கவர்ந்த புத்தகங்கள் பற்றி ‘படித்தேன் ரசித்தேன்’ நிகழ்ச்சியில் விளக்குகிறார் .

காலை 10:00 மணிக்கு வித விதமான சமையல்  வகையில் நேயர்கள் வரவேற்பை பெற்ற சமையல் கலைஞர் சசி செழியனின் ‘பாரம்பரிய பொங்கல்’ .அந்த காலத்தில் வைக்கப்பட்ட பொங்கலின் சிறப்பையும் ,எப்படி கொண்டாடினர் ,அதன் மருத்துவ குணத்தையும் ,வாழ்க்கையோடு எப்படி பிணையப்பட்டது என்பதை விளக்குகிறார் .

காலை 10:30 மணிக்கு பிரபல கானா பாடகர்கள் பாடும் ‘பொங்கல் கானா’ போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது .

பெப்பர்ஸ் தொலைக்காட்சியின்  மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

காலை 9:00 மணிக்கு பிரபல சினிமா பாடலாசிரியர் ,பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை ஜெயந்தாபொங்கலும் ,தமிழும்’ என்ற தலைப்பில் தமிழ் கலாச்சாரத்திற்கும் ,பொங்கலுக்கும் உள்ள ஒற்றுமையை பற்றி பேசியுள்ளார் .

காலை 10:00 மணிக்கு ‘என் ஜாக்பாட்’ எனும் நிகழ்ச்சியில் குலேபாகவலி, ஜாக்பாட் இயக்குனர் கல்யாண் தன் முதல் திரைப்படம் ,சினிமா பயணம் ,கடந்து வந்த பாதை, பிரபு தேவாவின் நட்பு மற்றும் அடுத்த படத்தின் பயணம் பற்றியும் மனம் திறந்து பேசும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்து வழங்குகிறார் .