நான் ரெடி, நீங்க ரெடியா? பொன்னாரின் பொளேர் பதில், பதட்டத்தில் எதிரிகள்

இருந்தாலும் இப்படி ஒரு பதில் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக இருந்தவரும் மூத்த பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணனிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை எதிர்கட்சியினர். இப்போது அவருக்கு, மக்களுக்கும், மீடியாவுக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இப்போது அக்கூட்டணியில் 37 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் பேசிய பொன்னார், “தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்பிக்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும்.

மேலும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி, 37 எம்பிக்களும் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி கட்சி அரசிடம் சென்று முறையிட வேண்டும். காவிரி தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு செய்யவேண்டிய பணிகளை கட்டாயம் செய்யும்,” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர், “முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும்,” என பொன் ராதகிருஷ்ணனைச் சாடியிருந்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட முட்டைக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற பொன்னாரிடம் செய்தியாளர்களிடம் இது குறித்து கேட்ட போது, “திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு முதலில் அவர் தயாரா. அவர் கட்சியில் வெற்றிபெற்றவர்கள், கூட்டணி கட்சியில் வெற்றிபெற்றவர்களும் தயாரா என எல்லாரையும் கேட்டுச் சொல்லட்டும்.

நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன். அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்தால் சந்தோஷம். நான் ரெடி, என்னைக்கு வரணும், எங்க கையொப்பம் போட்டுத் தரணும் என்று சொல்லட்டும்,” என்று ஒரே போடாக போட்டார்.

மேலும் அவர், “அவ்வாறு எழுதி கொடுத்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்கும், குமரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும். தூத்துக்குடி மக்கள் காங்கிரஸ், திமுக மீதுதான் கோப பட வேண்டும். மக்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவற்றுக்கு ஆதாரங்கள் உள்ளன. வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும்,” என்றார். வாயை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்று வாய‌டைத்துப் போய் நிற்கிறார்கள் எதிரணியினர்.