பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: சினிமா புள்ளிகளுக்கும் தொடர்பு?

பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு மட்டுமில்லாம, சில சினிமா புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

பசுமையான பொள்ளாச்சி, ஷூட்டிங்கிற்கு பிரசித்தி பெற்ற ஏரியா என்பதால், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்களோட நடமாட்டம் இருந்துட்டே இருக்கும். அவர்களில் சில பேருக்கு பொள்ளாச்சி கும்பல் தங்களிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்களை ‘அறிமுகம்’ செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி தோண்ட தோண்ட பல அதிர்ச்சிகள் வெளிவரும் நிலையில, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ அவரை விசாரணை வளையத்துக்குள் கொன்டு வந்தால் பல பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.

ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்கள் குறித்த வீடியோ காட்சிகளை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதைக் கண்டு போலிசுசக்கே அதிர்ச்சியா இருந்ததாம்.

மேலும், இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் என்றும் முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது, தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

“பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக தவறான செய்தி பரப்புவது தவறு. அப்படிச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் கூறியுள்ளார்.