பொள்ளாச்சி: செக்ஸ் விவாகரத்தில் பல பேர் கல்லா ஃபுல் ஆச்சு

பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் தோண்ட தோண்ட புதுப்புது பூதமா கிளம்புது. அதில் தொடர்புடைய திருநாவுக்கரசை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்த போது, அவன் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசுக்கு கீழ் ஒரு பெரிய கும்பல் இயங்கியது என்றும், மாதம் லட்சக் கணக்கில் அந்த கும்பலுக்கும் மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் திருநாவுக்கரசு செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி எல்லாம் திருநாவுக்கரசு தாராளமாக இருந்ததால் தான் பல ஆண்டுகளாக இந்த சம்பவங்கள் நடந்திருந்தும், அவை எல்லாம் இத்தனை நாட்களாக வெளிச்சத்துக்கு வராமல் இருந்ததாம்.

இது வரை தாங்கள் விசாரித்த அத்தனை திடுக் தகவல்களையும் சிபிசிஐடி போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாகவும், சிபிஐ சில முக்கிய கைதுகளை செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்புலம் இருக்கிறது என கூறப்படும் நிலையில், அதிமுக பிரமுகர்கள் மட்டுமில்லாமல் சில திமுக புள்ளிகளுக்கும் இந்த குற்றத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், ஒரு சில சினிமா புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. பசுமையான பொள்ளாச்சி, ஷூட்டிங்கிற்கு பிரசித்தி பெற்ற ஏரியா என்பதால், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்களோட நடமாட்டம் இருந்துட்டே இருக்கும்.

அவர்களில் சில பேருக்கு பொள்ளாச்சி கும்பல் தங்களிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்களை ‘அறிமுகம்’ செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இப்படி அடுக்கடுக்காக‌ பல அதிர்ச்சிகள் வெளிவரும் நிலையில, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.