போலீஸ்காரன்மகள் புதிய திரைப்படம்

(ஆணவக்கொலை பற்றிய கதை )

காவல்துறையில் சிறப்பு என்கவுண்டராக இருக்கும் ஒருவர், காதல் ஜோடிகளை கண்டால் விட மாட்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்வார். இந்த கொடூர போலீஸ்காரரின் மகள் தன்னைவிட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஒருவனை காதலிக்க வே,இதை அறிந்த போலீஸ்காரர் தன் மகள் கண் முன்னே அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகிறார். புழுவாய் துடிக்கிறாள் அவள். அவனுக்கு உயிர் வேண்டுமென்றால் நம்ம ஜாதியை சேர்ந்த ஒருவனை மணம் முடித்துக்கொள் என்று தன் மகளையே மிரட்டவே தன் காதலனின் உயிருக்காக அதற்கு சம்மதிக்கிறாள். பின் காதலனோ பைத்தியமாகிவிடுகிறான். சில நாட்கள் கழித்து இவ்விருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். சாதி வெறியின் கொடூரத் தால் உயிர் போகும் அவல நிலையை கண் முன்னே நிறுத்தும் கதையாக இந்த போலீஸ்காரன் மகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் டிகிரி காலேஜ் எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது. ஏற்கனவே தமிழில் ஸ்ரீதர் இயக்கி முத்துராமன் நடிப்பில் வெளிவந்த போலீஸ்காரன்மகள் எனும் தலைப்பையே இப்படத்திற்கு வைத்துள்ளனர். படத்தின் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் மிகவும் நெருக்கமாக நடித்து உள்ளனர்.

தெலுங்கானா, விஜயவாடா, பெங்களுர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் வருண், திவ்யா கதாநாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.ஜெயவாணி, ஸ்ரீனிவாஸ், நரசிம்மன், சி.ஏ.ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – கொண்டையா

வசனம், தமிழ் உருவாக்கம் – ஏ.ஆர்.கே.ராஜராஜா பாடல்கள்-முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம் இசை -சுனில் காஷியப் ஒளிப்பதிவு – முரளி மோகன் கதை திரைக்கதை இயக்கம் – நந்தி இப்படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்தது. விரைவில் திரைக்கு வருகிறது. _ வெங்கட் பி.ஆர்.ஓ