படப்பிடிப்புகளுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு விஷால் நன்றி!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகம்தான்.
படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் ஏராளமான தொழிலாளர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையுலகத்தினர் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. அதற்கு விஷால் நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி . இது நம்பிக்கை அளித்துள்ளது .எல்லா படப்பிடிப்பு குழுவினரும் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசிடமிருந்து இதற்கான 
பாதுகாப்புக்குரிய  விதிகளுடன் கூடிய அனுமதியையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.