*Peppers Tv program Dinam dinam dharisanam*

தினம் தினம் தரிசனம்

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் தினமும் காலை 6:30 மணிக்கு ‘தினம் தினம் தரிசனம்’
என்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் ஆலயங்களின் அற்புத
தரிசனங்கள், புராண புகழ் பெற்ற கோவில்களின் வரலாறுகள், பக்தி பரவசமூட்டும் ஆலய திருவிழாக்கள் ஆகியன ஒளிபரப்பாகிறது.

நமக்கு தெரிந்த ஆலயங்கள் தெரியாத தகவல்களுடன், ஆன்மிகத்தின் அற்புதங்களை
எல்லோரும், மிக எளிதாக அறியும் வண்ணம் இந் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இதுவரை தினம் தினம் தரிசனம் நிகழ்ச்சியில் ஆன்மீக புகழ் பெற்ற திருத்தலங்களான
மதுரை, இராமேஸ்வரம்,திருவண்ணாமலை, போன்ற திருத்தலங்களையும் இனிவரும்
நாட்களில் திருக்கடையூர், ஆச்சாள்புரம், திருவையாறு, திருச்சி , சீர்காழி ஆகிய
திருத்தலங்களும் ஒளிபரப்பாக இருக்கிறது.