மது, மாது, ஓவியா

மது அருந்துதல் உட்பட சர்ச்சைக்குரிய காட்சிகளில் சமீபத்தில் வெளியான 90 எம் எல் படத்தில் நடித்து புயலை கிளப்பிய ஓவியா, மேலும் ஒரு படத்திலும் இவ்வாறு நடித்துள்ளாராம். ஆனாலும் அந்த படத்துக்கு சென்சார்ல யூ சான்றிதழ் கிடைச்சிருக்கு.

கணேசா மீண்டும் சந்திப்போம் என்னும் அந்த படத்தில் பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ரத்தீஷ் எரட் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“ஒரு பைக்கை மையமாக வைத்து உருவான கதை. ஒரு பைக்கால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் காமெடியான படமாகி இருக்கிறது. முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் நடக்கிறது. பிக் பாசுக்கு முன்பே ஓவியா ஒப்பந்தமான படம்,” என்கிறார் ரத்தீஷ்.

மேலும் அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து ஓவியா நடித்து கொடுத்தார். மது அருந்தும் காட்சி கதைக்கு தேவைப்பட்டது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது மது அருந்துவது போன்று காட்சி இருக்கும்.

படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். கணேசா மீண்டும் சந்திப்போம் பெயருக்கான காரணம் சஸ்பென்ஸ். படம் பார்த்தால் புரியும்,” என்றார்.

களவாணியில் அப்பாவி பெண்ணா மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா, பிக் பாஸில் போல்ட்னெஸ் காட்டி எல்லாரையும் கிளீன் போல்ட் ஆக்கினார். பிக் பாஸ் சகப்போட்டியாளர் ஆரவோட லிவிங் டுகெதரா வாழ்வதா கிசுகிசுக்கப்படும் ஓவியா, கல்யாணம் தனக்கு செட் ஆகாதுன்னு சமீபத்தில் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருந்தார்.

நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை, என்றார் அவர்.

90 எம் எல் திரைப்படத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்ததைப் பற்றி கேட்ட போது, “பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை.

படத்தில் வயது வந்தோருக்கான வி‌ஷயங்கள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கிறது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாக பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாக பாருங்கள்”, என்று தில்லாக சொன்னார்.