தங்க மங்கை கோமதி, தரம் தாழ்ந்த அரசியல், தவிடுபொடியான பின்னணி

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை வைத்து எதிர்கட்சிகள் விரித்த வஞ்சக வலை ஒன்று டர்ரென்று கிழிந்த கதையைத் தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்ற செய்தியையும், அவரது ஏழ்மையான கிராம்த்து பின்னணியையும் தெரிந்துக் கொண்ட எதிர்கட்சிகள், திடீரென்று அவர் மீது பாசம் பொங்கி உடனடியாக உதவித்தொகைகளை அறிவித்ததோடு மட்டுமில்லாமல், தங்கள் ஆதரவு தொலைக்காட்சிகள் மற்றும் தங்கள் ஐடி செல்கள் மூலமாக விஷமப் பிரச்சாரத்தில் இறங்கின.

அதாவது, கோமதிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த உதவியையுமே செய்யாதது போலவும், அவர் ஆசிய தடகள போட்டியில் கூட பிய்ந்து போன ஷூவை அணிந்துக் கொண்டு தான் ஓடினார் என பச்சை பொய்களை பரப்பின. இதையும் சில அப்பாவிகள் நம்ப ஆரம்பித்தனர்.

ஆனால், கெட்டிக்காரன் புளுகு ஒரு நாள் கூட நிற்கவில்லை. உணமை நிலையை உடனடியாக விளக்க களம் இறங்கிய ஆளும் கட்சியினரும் நடுநிலையாளர்களும் கோமதி விளையாட்டு கோட்டா மூலம் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரியாக இருப்பதையும், அவருக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள அனைத்து வசதிகளையும் பட்டியலிட்டனர்.

அவர் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்களை ஏதோ இப்போது அனுபவிப்பது போல எதிர்கட்சிகள் சித்தரித்த சித்திர கதை இதனால் பன்சர் ஆனது. இதை வைத்து நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆதயம் தேடலாம் என்ற எண்ணமும் பகல் கனவு ஆனது.

திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். கல்லூரி காலங்கள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

அவருடைய விடா முயற்சியும், அரசின் ஆதரவும் இந்தியாவிற்கு தங்கத்தை பெற்று தந்திருக்கிறது. இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தோகாவில் மின்னல் வேகத்தில் ஓடிய கோமதி, சக வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார். இவர் பந்தய இலக்கை 2 நிமிடம் 2.70 விநாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.