நித்யா விவகாரம்: தாடி பாலாஜி ‘குடும்பத்தை கெடுத்த’ அந்த சப் இன்ஸ்பெக்டர் யார்?

பிக் பாஸ் கூட ரெண்டு சீசன் முடிஞ்சி போச்சு. ஆனால் யார் கண் பட்டதோ, தாடி பாலாஜி‍ நித்யா தம்பதியினரின் பிரச்சினை மட்டும் இடியாப்ப சிக்கலா நீண்டுக்கிட்டே போகுது. நித்யா கொடுத்த புகாரின் பேரில் நேற்று பாலாஜியிடம் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பாலாஜி சில பகீர் குற்றசாட்டுகளை வீசியுள்ளார். “உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன்.

எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. எனது குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது இந்த நடவடிக்கை போதாது.

இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்தை கெடுத்த அவருடைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் இன்னொரு குடும்பத்தை இனிமேல் கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொள்கிறேன்,” என்று பாலாஜி கூறினார்.

அவர் அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கூறிய புகார்களை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறை மேலிடம், அந்த அதிகாரியை விசாரிக்க சொல்லி உத்திரவிட்டு இருக்காம். புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்.

மாதவரம் போலீஸ் நிலையத்தில் பாலாஜி மீது அளித்துள்ள புகாரில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று நித்யா கூறியுள்ளார்.

கமல் சார் உள்ளிட்டோர் கூறியதால் இருவரும் சமரசம் ஆனோம். ஆனால் அவர் சேர்ந்து வாழத் துவங்கிய சில நாட்களிலேயே மீண்டும் குடித்துவிட்டு வந்து என்னையும், மகளையும் அடிப்பது, ரவுடிகள், நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் திட்டுவதுமாக இருந்தார் என்கிறார் நித்யா.

பெண்கள் இயக்கத்திற்கு நான் தலைவியாகியுள்ளது அவருக்கு பிடிக்கவில்லை. தலைவியாக இருக்க உனக்கு என்ன தகுதி உள்ளது என்றார். வாட்ஸ்ஆப்பில் அவரும், அவரின் நண்பர்களும் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள். அதனால் தான் போலீசில் புகார் அளித்தேன் என்று நித்யா தெரிவித்துள்ளார்.

மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா தெரிவித்து இருந்தார்.