நயன்தாராவின் வாக்கும், விக்னேஷ் சிவனின் கேக்கும்

என்ன தான் நானும் ரவுடி தான் படத்தால பெயர், புகழ் மற்றும் நயன்தாரா கிடைச்சாலும், அதற்கு பின் சூர்யா நடிப்பில் தான் இயக்கிய தானா சேர்ந்த் கூட்டம் ஓகோன்னு போகாததாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் தான் எடுக்கவிருந்த படம் டிராப் ஆனதாலும் (அந்த கால்ஷீட்டைத் தான் மிஸ்டர் லோக்கலுக்கு கொடுத்தார் சினா கானா) நொந்து போய்த் தான் இருந்தாராம் விக்னேஷ் சிவன்.

அவர் அப்படி துவண்டு போன சமயத்தில் எல்லாம், அவருக்கு பக்கபலமாய் இருந்து அவர் காயங்களை தன் கருத்துகளாலும் காதலாலும் ஆற்றியது நயன் தானாம். விக்னேஷ் சிவன் மூட் அவுட் ஆன போதெல்லம் மூச்சு முட்ட அவரை குதூகலப்படுத்திய நயன்தாரா, ‘கவலைப்படாதே பேபி, உனக்கான வாய்ப்பு சீக்கிரமாவே வரும்’னு தன்னம்பிக்கை டானிக் ஊட்டுவாராம்.

கடைசியில நயனின் வாக்கு பலித்து, எந்த சிவகார்த்திகேயனின் படம் தன் கையை விட்டு போனதோ, அதே சிவகார்த்திகேயனுடன் தற்போது இணைந்துள்ளார் விக்னேஷ். அதுவம் லைகா தயாரிப்பில் இருவரும் கை கோர்க்கின்றனர். இது விக்னேஷை மிகவும் குஷிப் படுத்தி உள்ளதாம்.

அதனால் நயன்தாரவுக்கு நன்றி சொல்ல நினைத்த அவர், தன் இதயம் கவர்ந்தவருக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷல் கேக்கை ஆர்டர் செய்து, அதில் இன்னும் ஸ்பெஷலான ஒரு வாக்கியத்தை எழுதி சர்ப்ரைஸ் ஆக நயனின் முன் நின்றாராம். நயன் குதூகலமடைய, அதைப் பார்த்து விக்னேஷ் உற்சாகமாக, அப்புறம் என்ன, ஒரே கொண்டாட்டம் தானாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயயக்கிய மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், லைகா நிறுவனம் தனது தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என நேற்று அறிவித்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேற்கண்ட படங்கள் இல்லாமல், சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.