Nayanthara's 'that' wish, Will Vignesh Sivan say yes

நயன்தாராவின் ‘அந்த’ ஆசை, ஓகே சொல்வாரா விக்னேஷ் சிவன்?

காதல் பறவைகளாக உல்கெங்கும் சுற்றி திரிந்து வரும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டிலாவது திருமணம் செய்தே தீருவார்கள் என்று கோலிவுட்டில் ஒரு பலமான டாக் இருக்கு.

இதுக்கிடையே, நயன்தாரா பற்றி ஒரு சுவாரசியமான தகவல் உலா வருது. அது என்னன்னா, அம்மணிக்கு திருமணத்துக்கு பிறகு வத வதன்னு வீடு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், ஒரு முழுமையான குடும்பத் தலைவியா மாறி அவங்களை எல்லாம் நல்லா படிக்க வெச்சு ஆளாக்கணும்னு ஆசையாம்.

நயன்தாரா எள்ளுன்னா எண்ணையா அனைத்து விஷயங்களிலும் நிற்கும் விக்னேஷ் சிவன் இந்த ஆசையையும் நிச்சயம் நிறைவேற்றுவார்னே கூறப்படுகிறது. சோ, கெட் ரெடி ஃபார் ஜுனியர் விக்னேஷ் சிவன்ஸ் அன்ட் நயன்தாராஸ்.

இதுக்கு நடுவுல, நயன்தாரா பிரேக்கே எடுக்க முடியாத மாதிரி, அவரை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்களோட எண்ணிக்கையும் அதிகரிச்சிக்கிட்டே வருது. இதனால பட வாய்ப்புகளும் வருமானமும் அதிகரிச்சிகிட்டே போனாலும், குடும்பத்தினர், திருமணம் செய்துக்க சொல்லி நயன்தாராவுக்கு கடந்த சில மாதங்களா பிரெஷர் பண்ராங்களாம். வயசாகிட்டே போறது தான் இதுக்க்கெல்லாம் காரணமாம்.

தொடக்க காலத்தில் எல்லா ஹீரோயின்களையும் போல, சராசரி கிளாமர் ரோல்களில் தான் நடித்து வந்தார் நயன்தாரா. அதுவும் பில்லா படத்தில் பிகினி உடையில் நயன்தாராவை பார்த்து, ஜொள்ளுவிடாத ஆட்களே இங்கில்லை எனக் கூறலாம். ஆனால் இன்று. நயன்தாராவுடன் ஒரு படமானாலும் நடித்துவிட வேண்டும் என்ற போட்டி தான் இங்கு நிகழ்கிறது.

மலையாளத்தில் கடந்த 2003ம் ஆண்டு ‘மனசினகரா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நயன், 2005ம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார்.

ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நயன் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, சர்ச்சைகளை சந்தித்தார். எனினும், தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தத் தொடங்கிய நயன், கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

ஐரா, கொலையுதிர் காலம் என நயன்தாராவின் பேர் சொல்லும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கலும் ஒன்று.