நரேன் பிறந்த நாளில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி!

நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 
நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.
இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார்.  இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார். 
ரசிகர்களை கவரும் விதத்தில் இந்த திரைப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக நரேனின் மாறுபட்ட கெட்டபும், நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் வேளையில் ஃபர்ஸ்ட் லுக்  வெளியிடப்பட்டு அதற்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு குவிந்துள்ளது.
இந்தப் படம் ‘கைதி’ சூப்பர் ஹிட்டுக்கு பிறகு நரேன் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
நடிகர், நடிகைகள்:
நாயகன் : நரேன் நாயகி : ஷ்ர்தா சிவதாஸ் முக்கிய நடிகர்கள் : பால சரவணன், காளி வெங்கட், கனிகா, ஷெரிஸி சீன் (பிலிப்பைன்ஸ்). 
தொழில்நுட்பக் கலைஞர்கள்: 
இசை : ஷஷ்வத், மங்கள் ஒளிப்பதிவு : விவேக் மேனன் எடிட்டிங் : நவீன் கலை : ராஜீவ் 
சவுண்ட் டிசைனிங் : ஷிஜின் மெல்வின் மன்ஹட்டன், அபிஷேக் மக்கள்தொடர்பு : ப்ரியா
[