கனிமொழிக்கு எதிராக களம் இறங்கும் நாடார்கள்: தூத்துக்குடியில் திடீர் திருப்பம்

கனிமொழி நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கக் காரணமே அங்கே இருக்கும் நாடார் சமுதாய வாக்குகள் தான். கனியின் தாயார் ராசாத்தி அம்மாள் நாடார் என்பதால், அந்த சமுதாயத்தின் வாக்குகளை அள்ளி விடலாம் என்று அங்கே அவர் போட்டியிடுகிறார்.

நாடார்களை கவர கனிமொழியும் திமுகவினரும் பல்வேறு திட்டங்களை வகுத்து கொண்டிருக்கும் நிலையில், சில நாடார் அமைப்புகள் மத்தியில் அவருக்கு பலத்த‌ எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நாடார் இளைஞர்களோ ஒரு படி மேலே போய், கனிமொழிக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் சோசியல் மீடியாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நாடார்களுக்கு ஒரு நினைவூட்டல். இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படும் கனிமொழியின் குடும்பத்தினர், 1994ல் நாடார்களின் வங்கியான TMB வங்கியை நாடார்களிடமிருந்து சூறையாட முயற்சித்தபோது,
அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் NS சந்திரபோஸ் நாடார் அவர்கள் அப்போதைய அகில இந்திய தலைவராக இருந்த லால் கிருஷ்ண அத்வானியிடம் முறையிட்டார்.

உடனே அத்வானி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் அவர்களை தொடர்பு கொண்டு நாடார் சமூதாய வங்கியை நாடார்களின் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கேசுபாய் படேல் அவர்கள் ESSAR சகோதரர்களை அழைத்து கடுமையாக எச்சரித்தவுடன் அவர்கள் நாடார் சமுதாயத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பங்குகளை நாடார் சமுதாயத்தினரிடம் விற்றனர். வங்கி காப்பாற்றப்பட்டது பாஜகவால் ..!! 25வருடம் கழித்து நாடார் தொகுதியை கைப்பற்ற நினைக்கிறது அதே குடும்பம்,” என்கிறது ஒரு பதிவு.

இன்னொரு பதிவோ, கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களை எல்லம் இழுத்ததோடு மட்டுமல்லாமல், “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுவது கனிமொழி அவர்கள். தூத்துக்குடி மாவட்ட சாமானிய வாக்காளனாகிய என் கருத்து :::::

ஈழத்தில் கொல்லப்பட்டானே 13 வயதே ஆன பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன். அவனுக்கு உன் மகன் வயது தானே இருக்கும். அவன் மரணத்திற்கு உன் மனம் துடிக்கவில்லையா?? உன் கண்ணில் நீர் கசியவில்லையா??

இந்துக்களின் மனதை புண்படுத்த தாலியை அருத்து விளம்பரம் தேடும் நீங்கள் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலாக சென்று கும்பிட்டு சந்தனம் குங்குமம் பூசிக்கொண்டு நடிப்பது ஏன்?? இது கேவலமாக தெரியவில்லையா உங்களுக்கு? ?

தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் கோபக்காரர்கள் தான். ஆனால் இரக்கமற்றவர்கள் கிடையாது. நான் அழகானவர்கள் கிடையாது தான். ஆனால் மனித மிருகங்கள் கிடையாது. நான் ஜாதி பற்று அதிகம் கொண்டவர்கள் தான் ஆனால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் கிடையாது.

வெள்ளைக்காரன் கூட ஜாலியன் வல்லாபாத் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டான். என் தாத்தா கர்மவீரர் காமராஜர் அவர்களை அர்ப தேர்தலுக்காக ஊழல் பெருச்சாளி, கொள்ளைகூட்ட தலைவன், எருமை மாட்டுத்தோளன், கருவாட்டுக்காரி மகன்,
பனையேறி, என்றெல்லாம் வசைபாடிய கருணாநிதியும் திமுகவும் இன்றளவும் அதற்கு வருத்தம் தெரிவித்தது உண்டா??

கனிமொழி அவர்களே! உங்கள் தந்தை கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர். நீங்களும் நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தவர். உங்கள் சாதனையை சொல்லி வாக்கு கேளுங்கள். தயவுசெய்து நானும் நாடார் தான் என்று எச்சத்தனமாக வாக்கு கேட்காதீர்கள். உண்மையான நாடாராகிய எங்களுக்கு அருவருப்பாக உள்ளது,” என்று போகிறது.

ஆனால், திமுகவினரோ, இந்த பதிவுகள் எல்லாம் பாஜகவினரின் வேலை, நாடார்களின் ஆதரவு கனிமொழிக்கு முழுமையாக உள்ளது என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும், நாடார்கள் யார் பக்கம் என்று.