கடன் வாங்காத இந்தியா, உலகமே வியக்கும் மோடி: இதை கட்டாயம் படிங்க‌

இந்தியா என்றாலே கடன்கார தேசம் என்ற இமேஜ் கடந்த சில ஆண்டுகளில் போயே போச்சு. இதற்கு முன் இருந்த‌ பிரதம மந்திரிகள் யாரும் செய்யாத விதமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் நரேந்திர‌ மோடி ஒரு டாலர் கூட உலக வங்கியிடமிருந்து கடன் பெறவில்லை. இதைப் பார்த்து உலக நாடுகள் மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.

அது மட்டுமா? அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6 ட்ரில்லியன் டாலர்களைக் கடக்கும். இது மோடியின் வார்த்தை அல்ல; மாறாக அமெரிக்காவின் பன்னாட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி-யின் கணிப்பு.

போர்ப்ஸ் பத்திரிகை சொல்கிறது: “இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயர மோடி மட்டுமே காரணமாக இருப்பார்” என்று. இன்னும் இருக்குது இருங்க. 137 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய சமீபத்திய அறிக்கை சொல்கிறது: இந்தியா 31 இடங்கள் முன்னேறி 137 நாடுகள் பட்டியலில் 40-ஆவது இடத்தில் இருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று வரை இந்தியா இந்த இடத்தை அடைந்ததே இல்லை; இதுவே முதல் முறை. போர்ப்ஸ் பத்திரிகை இந்த முன்னேற்றத்தை வெகுவாகப் பாராட்டியதோடு, இது மோடியின் முயற்சியினாலேயே சாத்தியமானது என்றும் சொல்கிறது.

ஒட்டுமொத்த நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீத அளவில் இப்போது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் சமீபத்தில் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் 10 சதவீதமாக இருந்த நாட்டின் பணவீக்கம் இப்போது 4.5 என்றஅளவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான துறைகள் ஒருசேர வளர்ச்சி பெற்று வருவதால் உலகமயமாக்கலுக்கு பின் இந்நிலையை இந்தியா எட்டியுள்ளது. குறைந்த பணவீக்கம், புதிய நிதிக் கொள்கை உட்பட பல்வேறு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவை அதிகரித்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், “ஜிஎஸ்டியின் மூலம் ஒட்டுமொத்த நாடும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரும் ஆக்கப்பூர்வமான கருத்துகள் பரிசீலிக்கப்படுகின்றன. கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் கலாச்சார ரீதியாக நம்மிடம் இருப்பதால் வங்கிகளின் நிலைமை மோசமடையவில்லை. எனினும், வாராக்கடன்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம்,” என்று கூறினார்.