இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள். இன்று இசைஞானி இளையராஜாவிற்கு 81ஆவது பிறந்தநாள்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் அழகிய புகைப்படமும் பரிசாகக் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. முகம் மலர பரிசை ஏற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா அவர்கள்.