திரு விஜய் விஸ்வா இன்று பள்ளிக்கரணையில் உணவு உடை போன்றவற்றை வழங்கினார்

பெரும் புயல் வெள்ளத்தினால் பள்ளிக்கரணையில் இருக்கும் மக்கள் பெரும் மழையினால் பெரும் அவதிக்கு உள்ளானது யாவரும் அறிந்த விஷயமே. பள்ளிக்கரணையில் மூழ்கி போன ஒரு நகராகவே உள்ளது பசும்பொன் நகர், மழை விட்டு இத்தனை நாட்கள் ஆகியும் இங்கு இன்னும் மின்சாரம் இல்லை குடி தண்ணீரில் இல்லை நடக்க சாலை இல்லை தேங்கி என் தண்ணீர் வடிந்த பாடு இல்லை மக்கள் அந்த தண்ணீரிலே வசித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பசும்பொன் நகர் ஸ்ரீநகர் விரிவாக்கம் போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்படைந்து இன்னும் மழை நீர் வடியாமல் அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நீந்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் இதுவரைக்கும் எந்தவித அரசாங்க உதவிகளோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அவர்களை தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டனர். இன்று முதல்முறையாக நடிகரும் சமூக அக்கறை உடையவருமான திரு விஜய் விஸ்வா அவர்கள் இன்று அங்கு இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உடை போன்றவற்றை வழங்கினார், குறைந்தபட்சம் ஆயிரம் உணவு பொட்டலங்களை அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் வீடு தேடி ஒவ்வொரு வீட்டிற்கும் அவர் உணவு பொட்டலங்களை வழங்கியதோடு மட்டுமல்லது அவர்களுக்கு ஆறுதலையும் வழங்கி மக்களுக்கு ஒரு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்து வந்திருக்கிறார். நாங்கள் திரு விஜய் விஷ்வா அவர்களுக்கு பள்ளிக்கரணை சார்பாக மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.