முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி தேர்தலை நடத்தியது.

முகப்பேர் வேலம்மாள் பள்ளி விளையாட்டு மற்றும் கலைத்துறையின் தலைமைப் பிரதிநிதி மற்றும் துணைப் பிரதிநிதிகள், பள்ளியின் முதன்மை மாணவர் தலைவர் மற்றும் பள்ளி மாணவியர் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் விதமாக
ஜுலை 04 அன்று இணையவழி தேர்தல் ஒன்றினை நடத்தியது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்தலில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வகுப்பின் மாணவர் தலைவர்களும் பங்கேற்று தமது வாக்குகளை அளித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்- தலைமைப் பிரதிநிதிகள் ,வரும் ஜுலை 07 ,2020 அன்று நடைபெற உள்ள இணைய வழி விழாவில் தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்ற உள்ளனர்.
விழாவில் சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு முகவுரை வழங்க உள்ளார்.
தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவர்களின் தலைமைப் பண்பினை வளர்த்து உயிரூட்டும் விதமாக இப்பணியை மேற்கொண்டு செவ்வனே அதனைச் செயல்படுத்தி வருகிறது முகப்பேர் வேலம்மாள் பள்ளி.