தமிழகத்தை காத்த மோடி: இலங்கை குண்டு வெடிப்பை பற்றி வெளிவராத தகவல்கள்

இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதிகள் தமிழகத்தை தான் குறி வைத்ததாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நம்மை, நம் இயக்கத்தை, நம்மை சார்ந்தவர்களை விடமாட்டார் என்னும் அச்சத்தாலேயே இலங்கையை தேர்ந்தெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி மீதான‌ அச்சத்தாலும், இந்தியா முழுதும் உள்ள பலத்த‌ பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவும் இஸ்லாமிய‌ தீவிரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஆனால், அண்டை நாட்டில் நடக்கப்போகும் அசம்பாவிதத்தைக் கூட தமிழக உளவுத்துறை முன்கூட்டியே மோப்பம் பிடித்து தெரிவித்தும், இலங்கை கோட்டை விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்; இன்று வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறார்.

பேரணியில், சாலை வழியாக சென்று, மக்களை சந்திக்கும் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், பாரதிய ஜனதா, கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக‌ ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் பாஜக‌ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, மோடியுடன் அரசியல் அல்லாத நேர்காணலை நடிகர் அக்‌ஷய் குமார் நடத்தியுள்ளார். இதில், பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலில் மோடி பேசுகையில், தான் பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்து பார்த்ததே இல்லை என்றும், சன்னியாசியாக வேண்டும் என்றே நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

எப்போதும் நீங்கள் கண்டிப்பான நிர்வாகி என்ற பிம்பம் உள்ளதே என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், அதுதவறு. அந்தந்த பணிகள் முடிவடைய வேண்டும். இதற்காக நான் அடிக்கடி நீண்ட நேரம் பணியாற்றியுள்ளேன், அதை மக்களும் பார்த்துள்ளனர். கடுமையான நிர்வாகியாக இருந்தால் உங்களால் யாரிடமும் வேலை வாங்க முடியாது. ஒரு உதாரணமாக இருந்து அவர்களை வழிநடத்துவதே சிறந்தது என்றார்.

எதிர்க்கட்சியில் தனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தையும் குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார்.

இனிப்புகளையும் குர்தாக்களையும் எனக்கு மம்தா பரிசாக அனுப்பி வைப்பது வழக்கம். ஒவ்வொரு வருடம் குர்தாக்களை எனக்கு அனுப்பி வைப்பார் மம்தா. இந்த வருடம்கூட ஓரிரு குர்தாக்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார் என மோடி குறிப்பிட்டார்.