Missing Mukilan, who is that mysterious woman

முகிலன் எங்கே? மர்ம் பெண் யார்?

சமூக ஆர்வலர்களும் சோசியல் மீடியா போராளிகளும் எங்கே முகிலன் என்ற கேள்விக் கணைகளை உரத்த குரலில் எழுப்பிக் கொண்டிருக்க, சமூக செயற்பாட்டாளா் முகிலன் தொடா்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி, முகிலன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான பேரணியின் போது காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த பிரத்யேக ஆவணப் படத்தை வெளியிட்டிருந்தாா். அதன் பின்னா் அவரை காணவில்லை. மதுரைக்கு ரயில் ஏறியதாக சொல்லப்பட்ட அவர், பாதி பயணத்துல காணாமப் போயிட்டதாக சொல்றாங்க.

இந்நிலையில் நேற்று, முகிலன் மாயமாகி உள்ளதாக கூறுவது பற்றி, அவரது குடும்பத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முகிலனைப் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய முகிலன் மாயமாகி உள்ளதாக கூறுவது பற்றி, அவரது குடும்பத்தினர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது, என்றார்.

இதற்கிடையே, முகிலனுக்கு ஒரு பெண்ணோட நட்பு ஏற்பட்டதாகவும், அது சம்மந்தமா அவர் ஒரு சிக்கலில் இருந்ததாகவும், அது கூட அவர் காணாம போனதுக்கு காரணாமாக இருக்கலாம்னு சில பேர் சொல்றாங்க. அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்கிற முயற்சியிலும் சிலர் இறங்கி இருக்காங்க.

முகிலனின் மனைவி பூங்கொடியோ, “கடைசியாக பேசியபோது அவர் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. நாங்கள் அடிக்கடி போன் செய்து பேசுவதில்லை. அதனால், அவர் புறப்பட்டாரா, வந்துகொண்டிருக்கிறாரா என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

முகிலன் கடந்த 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு தகவலை அளித்தார். அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயரதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டார்.

சம்பவத்திற்கு காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்று தெரிவித்து இருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.