பரத நாட்டியம் ஆடிக்கொண்டே ஓவியம் வரைந்து அசத்தும் கல்லூரி மாணவி மேக்னா உன்னிகிருஷ்ணன்
சென்னையில் காட்சி தொடர்பியல் பிரிவில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா உன்னிகிருஷ்ணன். இவரது பரத நாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீதேவி நிருத்யாலயாவில் சமீபத்தில் நடைபெற்றது.
வெறும் பாரத நாட்டியமாக மட்டுமல்லாமல் நடனம் ஆடிக்கொண்டே அங்கிருந்த ஓவிய பலகையில் நரசிம்ம மற்றும் வராக அவதார தோற்றங்களுடன் கூடிய விஷ்ணுவின் முழு உருவத்தையும் அழகான ஓவியமாக வரைந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
நான்கு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மேக்னா உன்னிகிருஷ்ணனுக்கு இதுநாள் வரை பக்கபலமாக இருந்து இந்த சாதனையை செய்வதற்கு அவரது அம்மா மஞ்சு உன்னி கிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியத்துடன் ஓவியத்திலும் பயிற்சி அளித்த திருமதி ஷீலா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
தான் பரதம் கற்ற ஸ்ரீதேவி நிருத்யாலாயாவில் தற்போது பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார் மேக்னா. அங்கே நடைபெற்ற 63வது அரங்கேற்றமாக மேக்னாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.