மதராசி ஆடியோ லாஞ்ச் உரை (சுருக்கம்)

மதராசி  ஆடியோ லாஞ்ச் – சிவகார்த்திகேயன் உரை (சுருக்கம்)

“இங்க வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். என்னுடைய குடும்பம், நண்பர்கள், மதராசி டீம், பத்திரிகையாளர் நண்பர்கள், மாணவர்கள் – எல்லோருக்கும் என் நன்றிகள்.

‘அமரன்’ படத்துக்குப் பிறகு ‘மதராசி’ வெளியாகிறது. நான் விழும்போது கை கொடுத்து, எழும்போது தூக்கிக்கொண்டுபோனது என் குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் தான்.

என் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போது, 2014-ல் நான் ஒரு ஆங்கராக இருந்தபோது ‘ஏழாம் அறிவு’ ஆடியோ லாஞ்சில் அழைப்பை பெற்றேன். அப்போது நான் ஒருநாள் முருகதாஸ் சார், ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே கனவு. அப்போது பலர் கிண்டல் செய்தாலும், இன்று முருகதாஸ் சார் இயக்கத்தில் ‘மராசி’ ஹீரோவாக நிற்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய அதிசயம்.

முருகதாஸ் சார் படங்கள் ஹீரோஇஸத்தை மறுபரிசீலனை செய்தவை. தல அஜித் சார் முதல் ரஜினி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஆமீர் கான், சல்மான் கான் வரை எல்லோருடனும் பணியாற்றியவர். அந்த பட்டியலில் நான் இடம் பெற்றதே என் அதிர்ஷ்டம்.

ருக்மிணி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒரு உண்மையான காதலின் சக்தியை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். அவருடைய நடிப்பு மாலதி என்ற கேரக்டரை ரசிகர்கள் மனதில் நிறுத்தும்.

எனது உயிர் நண்பன் அனிருத் – இது எங்கள் 8வது படம். அவர் எப்போதும் இசையால் எங்களை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்.

இந்த படம் எளிய காதலாகத் தொடங்கி, ஆக்ஷனாக மாறுகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள், சுதீப் எலமான் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்கள், கேவின் – எல்லாரும் மிரட்டலான வேலை செய்திருக்கிறார்கள்.

சிலர் என்னை ‘குட்டி தலபதி’ என்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் – அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். யாருடைய ரசிகர்களையும் பிடிக்க ஆசை இல்லை; அன்பையே சம்பாதிக்க ஆசை.

விமர்சனங்கள் வரும் – சச்சின், தோனி போன்ற பெரியவர்களுக்கும் விமர்சனம் வந்ததே. அதனால் நாமும் பயப்பட வேண்டாம். நல்லதை எடுத்துக்கொண்டு முன்னேறணும்.

‘அமரன்’ டிவியில் ஒளிபரப்பான பிறகு ஒரு அம்மா வந்து ‘இனிமேல் இப்படியா க்ளைமாக்ஸ் வைக்காதீங்க, எங்களை வருத்தாதீங்க’ என்று சொன்னார். அதுதான் எனக்கு பெரிய புரிதல் – நான் உழைப்பதற்கு மேலான அன்பை மக்கள் தருகிறார்கள். அந்த அன்புக்காக நான் இன்னும் கடுமையாக உழைப்பேன்.

இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பயணம். ‘மராசி’ படத்தைப் பார்த்து நீங்களும் நிச்சயம் பெருமை படுவீர்கள் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

*********************************************************************************************************************

 ‘மதராசி’ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உரை (சுருக்கம்)

 நண்பர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், அனைவருக்கும் எனது இனிய வணக்கம்.

மதராசி படத்தைப் பற்றி இன்று இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேச வேண்டும். என்ன பேசலாம் என்று யோசிக்கும்போது, ஒரு நண்பர் சொன்னார் – “ஓவரா பேசாதீங்க, சிம்பிளா பேசுங்க” என்று. ஆனால் இன்னொருவர் சொன்னார் – “நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையே பேசுங்க; இல்லையென்றால் உங்களுக்கு படத்தில் நம்பிக்கை இல்லையென்று நினைச்சுவாங்க” என்று.

உண்மையில், இந்தப் படத்தின் ஆரம்ப புள்ளி சிவகார்த்திகேயன் தான். அவர் என்னிடம் துவக்க நம்பிக்கையை கொடுத்தார். “நம்ம ஜெயிக்க முடியும்” என்ற நம்பிக்கையை அவர் மனதுக்குள் வைத்திருந்தார். குழந்தைகள், பெண்கள் போன்ற பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்த பிறகு தான் அவர் பெரிய மாஸ் ஹீரோவாக மாறினார். அவருடைய வளர்ச்சியை ஒரு படியாகப் பார்த்தால், உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி.

இந்தப் படத்திற்கு பெரிய பலமாக இணைந்தவர் அனிருத். அவருடைய பாடல்களும் BGM-மும் இந்தப் படத்திற்கு ஒரு புதிய உயரத்தை கொடுத்திருக்கிறது. சில சமயம் சோர்வாக இருந்தபோது கூட, அனிருத்தின் இசை எனக்கு ஆற்றலை தந்தது.

ஹீரோயினாக ருக்மிணி வந்து நடித்திருக்கிறார். கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். விக்ராந்த், சபீர், பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். எல்லாருக்கும் நன்றி.

எங்கள் DOP சுதீப், எப்போதும் வித்தியாசமான ஷாட்டுகளை எடுக்கிறார். கேமராவை ஆபத்தான இடங்களில் வைத்து, சிறந்த காட்சிகளைப் பிடித்திருக்கிறார். எங்கள் ப்ரொடூசர் பிரசாத் சார் – படம் நல்லா வரணும் என்பதற்காக அதிக அக்கறை எடுத்தார்.

மொத்த டீமும் ரொம்ப கடினமாக உழைத்திருக்கிறது. ஒவ்வொருவரின் உழைப்பும் இந்தப் படத்தின் பலம். நாங்கள் இந்த ஸ்கிரிப்டை எழுதும்போது எங்களுக்கு சந்தோஷம் கொடுத்தது. அதுபோல, செப்டம்பர் 5ம் தேதி படம் வெளிவரும் போது உங்களுக்கும் சந்தோஷம் தரும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் அரசியல் இல்லை. ஆனால் சமுதாயத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை எச்சரிக்கும் படமாக இருக்கும். சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு, டைமிங் – எல்லாமே தனித்துவமானவை. அவருடைய சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆக்ஷனோடு ஹூமர் கலந்த கேரக்டரை அவர் அற்புதமாக செய்திருக்கிறார்.

இன்னும் நிறைய பேரின் பெயரைச் சொல்ல முடியாமல் விட்டிருப்பேன். ஆனாலும் அவர்களுடைய உழைப்பும் கனவும் இந்தப் படத்தில் உள்ளது.

இந்தப் படத்தை பாருங்க, உங்களுக்கு பிடிக்கும். நன்றி. வணக்கம்.

*********************************************************************************************************************

இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உரை (சுருக்கம்)

சாய்ராம் ஏன் தெரியல, எப்போ இந்த “சாய்ராம்” என்று சொன்னாலே உள்ளுக்குள் ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி வருது. அந்த உணர்ச்சியை உங்கிடமிருந்து வாங்கி நானும் ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணுறேன். இதுக்கு எல்லாம் காரணம் நீங்கள்தான் – லவ் யூ ஆல் ❤️

முதலில் நன்றி சொல்லணும் – நம்ம மதராசி படத்தின் புரொட்யூசர் திருப்பதி பிரசாத் சார். நிறைய டார்ச்சர் பண்ணிட்டேன் சார், ஆனா நீங்க கொடுத்த சப்போர்ட் மறக்க முடியாது.

முருகதாஸ் சார் அண்ட் டீம் – அபய் சுந்தர்ராஜன், எல்லா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸும் – நீங்க எல்லாம் பல வருடங்களாக என்னோட கிளோஸ். செம்மையா வேலை பண்ணீங்க. ஹாட்ஸ் ஆஃப் கைஸ்

பிஜு மேனன் சார், சுதீப் ரூ., ருக்மிணி – எல்லாரும் கலக்கிட்டீங்க. ஸ்பெஷலி ருக்மிணி – செம்ம பர்ஃபார்மன்ஸ். உங்க futureக்கு மனசார வாழ்த்துகள்.

முருகதாஸ் சார் – நான் 22 படம் பண்ணினாலும், என்னோட careerக்கு ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட் நீங்க தான். மான் கராத்தே, கத்தி இரண்டுமே இன்னும் நினைவு இருக்குது. அந்த நாள் நீங்க எனக்கு கொடுத்த டபுள் ட்ரீட் தான், இன்று இந்த ஸ்டேஜ்ல நிக்கிறேன். நான் எப்பவுமே சொல்லுவேன் – அது உங்க காரணம் தான்.

எஸ். கே. (சிவகார்த்திகேயன்) – நாங்க இருவரும் ஒரே காலகட்டத்துல ஆரம்பிச்சோம். த்ரீ, எதிர்நீச்சல் ல இருந்து இப்போ வரைக்கும் ஒரு பிரத்தியேக பாண்டிங். அது வார்த்தையால் சொல்ல முடியாது. அவர் வெற்றி அடைந்தா எனக்கு வெற்றி அடைந்த மாதிரி பீல் வரும். அந்த பியூரான ஹார்ட் தான் அவரை இந்த லெவலுக்கு கொண்டு வந்திருக்கு.

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்புலம் உங்க எல்லாரின் அன்பு தான். நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.

மதராசி – செப்டம்பர்
எஸ்.கே-வின் புதிய அவதாரம் + முருகதாஸ் சார் ஸ்டைல் – கண்டிப்பா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

இது என் ஊரு, என் மக்கள் – உங்க அன்பு இருந்தா நான் எப்பவுமே நிப்பேன்

லவ் யூ ஆல் ❤️ நன்றி

 

Exit mobile version