ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன்

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும்.   அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் !

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.  வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம், குட் நைட் ),  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம்  (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இயக்குனர் சுந்தர்ராஜன்,  தனம் (சிவப்பு மஞ்சள் பச்சை ) பிரசன்னா பாலச்சந்திரன் (மண்டேலா, சேத்துமான்) ஜென்சன் (அயலி ) இணைந்து  நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில்,     இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.  இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி,கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி,
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்,தயாரிப்பு: செ. வினோத்குமார்,
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்,இசை: வைசாக்,படத்தொகுப்பு: கண்ணன்,கலை வடிவமைப்பு: சுரேஷ் குமார்,ஒலிப்பதிவு: விக்ரமன்,சண்டைப்பயிற்சி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்,
உடை வடிவமைப்பு: மீரா,விளம்பர வடிவமைப்பு: இளங்கவின்,மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா,  நிறுவனத்தின் பெயர்: சினிமாக்காரன்