மாமல்லபுரம்  ஸ்ரீ சயன பெருமாள் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங் களின் தலைவர் திரு.ஆர். ஜி  குமார் அவர்களால் 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மாமல்லபுரம்  ஸ்ரீ சயன பெருமாள் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

தனியாரின் முயற்சியால் புனரமைக்கப்பட்டு மாமல்லபுரத்தில் ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம்!

அருள்மிகு ஸ்தல சயனப்பெருமாள் திருக்கோயில் மாமல்லபுரத்தில் இருக்கிறது.

இத் திருக்கோயில் ஜி.கே ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங் களின்  தலைவர் திரு.ஆர். ஜி குமார் அவர்களால் 3. 51 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு  செய்யப்பட்டு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தி அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஸ்ரீமன் நாராயணன் தனது திருப்பாற்கடல் என்னும் பாம்பணையைத் துறந்து அர்ச்சாவதார நிலையில் தரையில் ஸ்தல சயனமாய் கிடந்த திருக்கோலத்தில் காட்சி  தரும் திவ்ய தேசம் தான் இந்தத் திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரம்.அந்த மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் பதினான்காம்  நூற்றாண்டில்  பராங்குச
மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் தென்னிந்திய கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள கருங்கல் தூண்கள் கலை வடிவத்திற்குச் சான்றுகள்.

இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக மதிக்கப்படுகிறது. பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இது கருதப்படுகிறது.12 ஆழ்வார்களுக்கும் இங்கே தனித்தனி சன்னிதிகள் உண்டு. பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.

காலச் சூறாவளியில் களை இழந்து சிதிலமடைந்திருந்த இந்த ஆலயம் ஜி . கே. ரியால்டர்ஸ் மற்றும் இமயம் குழுமம் நிறுவனங்களில் தலைவர் திரு ஆர்.ஜி.குமார் அவர்களால் 3.51 கோடிரூபாய் செலவு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.ஆலயத்தின் 
உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் புதுப்பிக்கப்பட்டு இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை, தை மாதம் 18ம் தேதி, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் இந்தத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு பொற்கால நல்லாட்சியில் நடைபெறும் இவ்விழாவில் மாண்புமிகு திரு துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர் ,மாண்புமிகு திரு தா.மோ.அன்பரசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மாண்புமிகு திரு பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலை துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவில் பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், இந்து சமய அறநிலைத்துறை முன்னணி அலுவலர்களும், ஆலய அறங்காவலர் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.

ஆலயத்தில் உற்சவமூர்த்தி ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள், ஸ்ரீ நில மங்கைத் தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதத்தாழ்வார், விமானங்கள் ,ராஜகோபுரம், த்வஜஸ்தம்பம், கருடாழ்வார், அனுமார் மற்றும் பரிவார சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறும்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு இந்த ஆலயத்தை முறைப்படி எதிர்காலத்தின் தொடர் பராமரிப்புக்காக இந்து சமய அறநிலைத்துறையிடம் ஆயயத்தைப் புனரமைப்பு செய்த நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஜி. குமார் ஒப்படைக்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுமாறு புனரமைப்பு குழுவின் தலைவர் திரு.ஜி.கே.குமார் பக்தர்களிடம் வேண்டுகிறார். இந்து சமய அறநிலைத்துறையின் செயல் அலுவலர் திரு எம் .சக்திவேல், ஆய்வர் திரு நா. பாஸ்கரன், உதவி ஆணையர் திரு பொ. இலட்சுமி காந்த பாரதிதாசன், இணை ஆணையர் திருமதி வான்மதி ஆகியோரும் மக்களைக் குட முழுக்கு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

Share this:

Exit mobile version