‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

Hotspot 2 Much - Official Trailer | Vignesh Karthick | KJB Talkies | Ants To Elephants Cinemas Co

நடிகை ப்ரியா பவானி சங்கர், அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

கே ஜெ பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ரியா பவானி சங்கர் , அஸ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‌’ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

நடிகை பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஜே பி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான கே. ஜே. பாலா மணி மார்பன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.‌

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலும் பேரலல் யுனிவர்ஸ் – லேட்டஸ்ட் தமிழ் சினிமா ப்ரோமோசன் ட்ரெண்ட் – என கலக்கலான கன்டென்ட்டுகள் இடம் பிடித்துள்ளதால்… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ இம்மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version