மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்

Ace - Trailer | Vijay Sethupathi, Rukmini | Justin Prabhakaran| Sam CS| Arumugakumar| Yogi Babu| 7CS

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம்

பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE)  பட முன்னோட்டம்

‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன்  பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே. முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மலேசிய நாட்டில் படமாக்கப்பட்டு, எதிர்வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ ஏஸ் ‘ ( ACE) திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய காதல் காட்சிகள்- அதிரடி ஆக்சன் காட்சிகள்- காமெடி காட்சிகள்- கண்ணுக்கு அழகான காட்சிகள் – என அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Share this:

Exit mobile version