‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி விறுவிறுப்பாக வெளியாகி உள்ள படம் தான் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இதற்கு முன் அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் லோகேஷ் கனகராஜுக்கு முகவரி தந்த அவரது முதல் படமான ‘மாநகரம்’.

அந்தவகையில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’.படம் பார்த்த பலரும் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மீண்டும் ஒரு மாநகரம் படத்தை, அதேசமயம் வேறு ஒரு கதைக்களத்தில் வேறு ஒரு கோணத்தில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்கிற கருத்தை தவறாமல் வெளிப்படுத்தினார்கள். இப்படி மவுத் டாக் மூலம் படம் பற்றிய செய்தி வெளியே பரவ, தற்போது திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆவல் எழவே அவருக்கு சிறப்பு காட்சியாக ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

படம் பார்த்த விஜய் சேதுபதியும் படக்குழுவினரை நேரில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த பாராட்டு படக்குழுவினரை மேலும் உற்சாக படுத்தியுள்ளது.

Share this:

Exit mobile version